நாய், பூனைகளுக்கு ஸ்பெஷல் கார் வந்தாச்சு! இதுக்காக தான் ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணுறாங்க!
ஹோண்டா நிறுவனம் தனது எலவேட் காரில் நாய்களை அழைத்துச் செல்வதற்கு என்று ஸ்பெஷல் எடிசன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஜப்பானில் விற்பனை செய்துவரும் டபிள்யூஆர்வி என்ற காரில் இந்த எடிசனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாகனம் பயன்படுத்தும் பல தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். நாய்,பூனை போன்ற செல்ல பிராணிகளை அவ்வப்போது அவர்கள் கார்களில் அழைத்து செல்வது, ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. கார்களில் செல்லும்போது அந்த செல்லப் பிராணிகள் கார்களின் உள்பகுதியை சேதப்படுத்துவது கார்களில் இருந்து வெளியே துள்ளி குதிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

கார்கள் வடிவமைக்கப்படும் போது அது செல்ல பிராணிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்படுவதில்லை. இதனால் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலர் கார் வாங்கும் போது அது செல்லப் பிராணிகளுக்கு ஏற்றதாக இருக்குமா எனவும் பார்த்து வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் ஜப்பானில் இப்படியாக செல்லப்பிராணிகளை வளர்க்கும் மக்களின் எண்ணத்தை கருத்தில் கொண்டு தனது ஹோண்டா டபிள்யூஆர்வி என்ற காரில் பெட் எடிசன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் பல்வேறு விதமான செல்லப்பிராணிகள் தொடர்பான தயாரிப்புகள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன. இது ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு நடக்கும் மிகப்பெரிய கண்காட்சி ஆகும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் செல்லப் பிராணிகளுக்கான உபகரணங்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த பொருட்களை எல்லாம் நிறுவனம் தனது ஹோண்டா டபிள்யூஆர்பி காரின் உள்ளே வைத்து காட்சிப்படுத்தியிருந்தது. அதாவது இந்த பொருட்களை எல்லாம் அந்த காருக்குள் வைத்து எடுத்துச் செல்லும் அளவிற்கு காரை இடவசதி இருப்பதை சொல்லும் வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஹோண்டா டபிள்யூஆர்வி கார் தான் இந்தியாவில் எலவேட் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது. ஹோண்டா நிறுவனம் நாய்களுக்கான தனி அங்காடியில் நாய்களுக்கான உதிரி பாகங்களை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த உதிரி பாகங்களின் ஃபினிஷ் சிறப்பாக இருந்தது. இந்த பொருட்களை எல்லாம் வைத்து வாகனங்களில் செல்லப்பிராணிகளை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கூட்டி செல்ல முடியும்.
இந்த உதிரி பாகங்களில் முக்கியமாக நாய்களுக்கான சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இந்த சீட்டில் இரண்டு குட்டி நாய்களை அமர வைத்து கூட்டிச் செல்ல முடியும். முக்கியமாக இதை முன் பக்கம் உள்ள சீட்டிலேயே பொருத்திக் கொள்ள முடியும். இந்த உதிரி பாகம் அந்நாட்டின் மதிப்பு படி 21,450 யென் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 12000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இதுபோக அடுத்த முக்கிய உதிரிபாகமாக பெற்றோர் லைனிங் கவர் இந்திய மதிப்பில் ரூபாய் 3600 என்ற விலையிலும் நடுத்தர மற்றும் சிறிய நாய்களை கூட்டிச்செல்லும் சீட் கேரேஜ் ரூபாய் 13800 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதை பின் சீட்டில் பொருத்திக்கொண்டு பயணம் செய்யலாம். இதுபோக இந்த காரின் பூட் பகுதி பெரிதாக இருப்பதால் செல்ல பிராணிகளுக்கான அனைத்து பொருட்களையும் எடுத்து செல்ல இட வசதி இருக்கும்.
இதுபோக இந்த நிறுவனம் இந்த காருக்கான பேட்டி எம்பளம் ஒன்றை ரூபாய் 2400 என்ற விலையில் விற்பனை செய்கிறது. பெட் களுக்கான சிறப்பு இன்டீரியர் ஸ்டிக்கர்களை ரூபாய் 2500 என்ற விலையில் விற்பனை செய்கிறது. பெட் அலுமினியம் வீல் சென்டர் கேப்கள் ரூபாய் 4200 முதல் 4800 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது .
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்த தயாரிப்புகளை எல்லாம் கார்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகவும் அதே நேரம் சில பிராணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளது. முக்கியமாக காரில் பயணிக்கும் போது செல்ல பிராணிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியே வராதபடி இதன் பொருட்கள் எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








