ஹோண்டா கம்பெனியோட நல்ல கார் ஆச்சே... இதுக்கே இப்படி ஒரு நிலைமையா... வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,723 எலவேட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2,822 ஆக இருந்தது.

இது 39 சதவீத வீழ்ச்சி ஆகும். ஹோண்டா எலவேட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீப காலமாக இந்த காருக்கு வரவேற்பு குறைந்து கொண்டு வருவதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Honda Elevate

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை 11.91 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.63 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா எலவேட் காரில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

Honda Elevate SUV

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹோண்டா எலவேட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 121 பிஎஸ் பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களுடன், ஹோண்டா எலவேட் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கும் கூட, ஹோண்டா எலவேட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2024, 23:57 [IST]
English summary
Honda elevate sales report august 2024 39 per cent degrowth
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+