ஒட்டுமொத்த இந்தியாக்கும் பெருமை தேடி தந்த ஹோண்டா! அந்த நாட்டுக்காரங்களே நம்மூர் தயாரிப்பைதான் ஓட்ட போறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தி கொண்டுள்ள கார் என எலவேட்டை குறிப்பிட முடியும்.

இந்த சூழலில் தென் ஆப்ரிக்கா (South Africa) சந்தையில் ஹோண்டா எலவேட் கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கே பெருமிதமான விஷயம் என்னவென்றால், இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார் ஆகும். இங்கிருந்து தென் ஆப்ரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Honda Elevate Mega Delivery

தென் ஆப்ரிக்க சந்தையில், கம்ஃபோர்ட் (Comfort) மற்றும் எலிகன்ஸ் (Elegance) என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants), ஹோண்டா எலவேட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க சந்தையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை (Price) இந்திய மதிப்பில் சுமார் 16 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிசைனை பொறுத்தவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடலும், தென் ஆப்ரிக்காவில் களமிறக்கப்பட்டுள்ள மாடலும் ஒன்று போலவே உள்ளன. எந்தவொரு மாற்றமும் இல்லை. முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் 'L' வடிவ எல்இடி டெயில்லைட்கள் போன்றவை முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

Honda Elevate

உட்புறத்தை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்திய மாடலில் இடம்பெற்றுள்ள 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் (ADAS) ஆகிய வசதிகள் தென் ஆப்ரிக்க மாடலில் இடம்பெறவில்லை.

செயல்திறனை பொறுத்தவரையில், 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையை போல் தென் ஆப்ரிக்க சந்தையிலும் ஹோண்டா எலவேட் கார் விற்பனையில் சாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையிலும் வரும் காலத்தில் ஹோண்டா எலவேட் கார் பல்வேறு புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்படவுள்ளது. அத்துடன் புதிய இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கு, ஹோண்டா எலவேட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 14:30 [IST]
English summary
Honda elevate suv launched in south africa read full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+