ஹோண்டா இந்த உலகத்துக்காக ரெடி பண்ணி வச்சிருக்க புதுமுக காரை பாத்தீங்களா! ரெண்டு குடும்பமே போகலாம் போலையே!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) இந்த உலகத்திற்காக புதுமுக கார் ஒன்றை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃப்ரீடு (Freed) எனும் காரையே அது தயார் செய்திருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எம்பிவி (Compact MPV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஜப்பானிலேயே இந்த கார் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. விலைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
2.508 மில்லியன் தொடங்கி 3.437 மில்லியன் வரையிலான விலையிலேயே இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஏர் மற்றும் கிராஸ் ஸ்டார் ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே இந்த கார் ஜப்பானில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. விரைவில் உலக சந்தையிலும் இந்த காரை ஹோண்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹோண்டா ஃப்ரீடு 4,310 மிமீ நீளம், 1,720 மிமீ அகலம் மற்றும் 1,780 மிமீ உயரம் ஆகிய அளவுகோளிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் வீல்பேஸ் 2,740 மிமீட்டராக உள்ளது. மேலும், இந்த காரில் இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடன் இ:எச்இவி (e:HEV) ஹைபிரிட் சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் டூயல்-மோட்டார் கொண்ட ஹைபிரிட் சிஸ்டம் ஆகும். முதல் மோட்டார் அதிகபட்சமாக 6,600 ஆர்பிஎம்-இல் 118 பிஎஸ் பவரையும், 4,300 ஆர்பிஎம்-இல் 142 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

சிவிடி கியர்பாக்ஸின் வாயிலாகவே இந்த திறனை அம்மோட்டார் வெளியேற்றும். முன் வீல் இயக்கம் மற்றும் ஆப்ஷனாக அனைத்து வீல் இயக்கம் ஆப்ஷன் இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், ஹைபிரிட் அம்சம் ஃப்ரீடு அதிகபட்சமாக 123 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும்.
மின்சார மோட்டார் மற்றும் பெட்ரோல் மோட்டார் இரண்டும் இணைந்தே இந்த சூப்பரான திறனை வெளியேற்றுகின்றது. மேலும், இந்த தேர்வு ஒரு லிட்டருக்கு 25 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், ஹைபிரிட் சிஸ்டம் அல்லாத ஃப்ரீடு ஒரு லிட்டருக்கு வெறும் 16.2 கிமீ வரை மட்டுமே மைலேஜை தரும்.
மைலேஜ் தருவதில் மட்டுமில்லைங்க இந்த கார் தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், தன்னாட்சி அவசர கால பிரேக்கிங் (AEB), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ACC), லேன் கீப் அசிஸ்ட் (LKA) மற்றும் ஹோண்டா சென்சிங் அமைப்பு என பல்வேறு அம்சங்களை ஃப்ரீடு தாங்கி இருக்கும்.
இத்துடன், நவீன கால அம்சமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய சென்ட்ரல் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய ஏசி துவாரங்கள் என பலதரப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மாறுபாடுகளிலும் இந்த காரை விற்பனைக்கு வழங்க இருப்பதாக ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. சக்கர நாற்காலி இருக்கையை காருக்குள் புகுத்துவதற்கான அமைப்பு இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹோண்டா ஃப்ரீடு மேம்படுத்தப்பட்ட மோட்டார், இருக்கை தேர்வுகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜப்பானியர்களைக் கவரும் நோக்கில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனதில் கட்டாயம் எர்டிகா, எக்ஸ்எல்6 ஆகிய கார் மாடல்களின் மார்க்கெட்டை லேசாக அசைத்து பார்க்கக்கூடும். ஆனால், இதன் வருகை பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








