குடும்பத்தோடு தாராளமான இட வசதியுடன் ஒக்காந்துட்டு போகலாம்.. ஹோண்டா ஃப்ரீடு எம்பிவி வெளியீடு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா ஃப்ரீட் (Honda Freed) எனும் எம்பிவி (MPV) ரக கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் மாடலின் சிறப்புகள் என்ன? எத்தனை பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்? இது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்கிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா ஃப்ரீட், இந்த பெயர் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், உலக சந்தைக்கு இந்த பெயர் மிகுந்த பரீட்சையமானது ஒன்றாகும். இந்த பெயரில் அந்நிறுவனம் மூன்று வரிசைகள் இருக்கை அமைப்பைக் கொண்ட ஓர் மினி வேனை (minivan) உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

Honda freed mpv

இந்த நிலையிலேயே ஹோண்டா ஃப்ரீட் எனும் பெயரில் நிறுவனம் எம்பிவி ரக காரை தற்போது தயார் செய்திருப்பதாகவும், அதை நிறுவனம் வெளியீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளஇயாகி உள்ளன. நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பானிலேயே முதலில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. அடுத்த மாதம் அங்கு விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதை முன்னிட்டே ஃப்ரீடு தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கார் ஜப்பானியர்களின் கவனத்தை மட்டுமல்ல உலக அளவில் உள்ள எம்பிவி கார் பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஹோண்டா சிட்டி செடான் காரின் சிறப்பம்சங்கள் பலவற்றை இந்த கார் பெற்றிருக்கின்றது.

Honda freed interior

புதிய ஃப்ரீடு இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் மாருசி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக மாறும். இந்த காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 2012 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

எர்டிகாவிற்கு போட்டியளிக்கும் விதமாக இதைக் கொண்டு வர பிளான் போட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஃப்ரீடு மாடலுக்கு பதிலாக 2014இல் மொபிலியோ களமிறக்கப்பட்டது. இது ஓர் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்பட்ட எம்பிவி ரக கார் மாடல் ஆகும்.

Honda freed seat

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஃப்ரீடு 2024 ஆம் ஆண்டிற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் தனித்துவமான கிரில் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பம்பரும் புதிய லுக்கைக் கொண்டிருக்கின்றது. இவற்றை ஹோண்டாவின் வேறு எந்த கார் மாடலில் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், இதன் ஹெட்லேம்ப்பும் புதிய லுக்கிற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்து ஃப்ரீடு எம்பிவிக்கு முற்றிலும் புதிய லுக்கை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர் ஆகும். வீல் பேஸ் 2.74 மீட்டராக உள்ளது. ஹோண்டா சிட்டியைவிட அதிக நீளம் இதுவாகும்.

Honda freed rear

மூன்று வரிசை இருக்கை அமைப்பை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதை 5 சீட்டர் வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதிக பூட்-ஸ்பேஸை வழங்கும் நோக்கிலேயே இந்த வசதி வழங்கப்படுகின்றது. ஆகையால், ஒரு குடும்பம் மிக தாராளமாக அமர்ந்து இந்த காரில் பயணிக்க முடியும்.

இத்துடன், பொழுதுபோக்கு செய்த வண்ணமும் இதில் பயணிக்க முடியும். இதற்காக பெரிய திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், சொகுசான ரைடு அனுபவத்தைப் பயணிகள் பெறும் விதமாக ஏசி வென்ட் ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சினை பொருத்த வரை ஹோண்டா சிட்டி கார் மாடலில் வழங்கப்படும் அதே ஆப்ஷனே இதிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், துள்ளியமான விபரங்கள் அதுபற்றி இப்போது வெளியிடப்படவில்லை. பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைபிரிட் ஆப்ஷன் இந்த கார் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது ஹோண்டா எலிவேட்டிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு விற்பனைக்கு வரும் எனில் கட்டாயம் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரை இந்தியா கொண்டு வருவதற்கான எந்த சுவடுகளும் இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, May 11, 2024, 5:00 [IST]
English summary
Honda freed mpv revealed for japan market
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X