அதிகம் விற்பனையாகும் காருக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்டதா ஹோண்டா? நல்ல விற்பனையை தடுக்கவா இப்படி செஞ்சாங்க?

ஹோண்டா (Honda) நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய எலிவேட் (Elevate) கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். சொல்லப் போனால் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்கிற மகுடத்தை இந்த கார் மாடலே சூடியிருக்கின்றது.

பல ஆண்டுகள் கழித்து நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த எஸ்யூவி ரக கார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்த 100 நாட்களிலேயே 20 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று வரலாற்று சாதனையை எலிவேட் படைத்தது. இந்த மாதிரியான சூழலில் இதன் விற்பனைக்கு ஆப்பு வைக்கும் விதமான ஓர் செயலை ஹோண்டா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Honda elevate price hike

அதாவது, நிறுவனம் இந்த கார் மாடலின் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கின்றது. ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 58 ஆயிரம் வரையில் இதன் விலையில் ஹோண்டா உயர்வைச் செய்திருக்கின்றது. விலை உயர்விற்கு கார் கட்டுமான செலவு அதிகரித்திருப்பதே காரணம் என நிறுவனம் கூறி இருக்கின்றது.

இந்த விலை அதிகரிப்பால் 10 லட்சத்து 99 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்த ஹோண்டா எலிவேட்-இன் ஆரம்ப விலை தற்போது மிகக் கடுமையாக உயர்ந்து இருக்கின்றது. ரூ. 58 ஆயிரம் கூடுதலாக விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஆரம்ப நிலை தேர்வான எஸ்வி எம்டி-யின் விலை ரூ. 11.57 லட்சமாக அதிகரித்து இருக்கின்றது.

இது மிக மிக அதிகம் ஆகும். மேலும், ஹோண்டா எலிவேட்டில் அதிக விலை உயர்வைப் பெற்ற தேர்வாகவும் இதுவே இருக்கின்றது. இதைப் போலவே மற்ற தேர்வுகளின் விலையிலும் உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், அவற்றின் விலையில் ரூ. 20 ஆயிரம் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

ஹோண்டா எலிவேட், எஸ்வி எம்டி உடன் சேர்த்து, வி எம்டி, வி சிவிடி, விஎக்ஸ் எம்டி, விஎக்ஸ் சிவிடி, இசட்எக்ஸ் எம்டி மற்றும் இசட்எக்ஸ் சிவிடி ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், வி எம்டியின் விலை ரூ. 12.10 லட்சத்தில் இருந்து 12.30 லட்சமாகவும், வி சிவிடி விலை ரூ. 13.20 லட்சத்தில் இருந்து 13.40 லட்சத்திற்கும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதேபோல், விஎக்ஸ் எம்டி ரூ. 13.49 லட்சத்தில் இருந்து 13.69 லட்சத்திற்கும், விஎக்ஸ் சிவிடி ரூ. 14.59 லட்சத்தில் இருந்து 14.79 லட்சத்திற்கும், இசட்எக்ஸ் எம்டி ரூ. 14.89 லட்சத்தில் இருந்து 15.09 லட்சத்திற்கும், இசட்எக்ஸ் சிவிடி ரூ. 15.99 லட்சத்தில் இருந்து 16.19 லட்சத்திற்கும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எலிவேட் வளர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையிலேயே ஹோண்டா இதன் விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கின்றது. குறிப்பாக, ஆரம்ப நிலை வேரியண்டின் விலையை அரை லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்திருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனையில் இந்த கார் மாடல் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் மாடல்களுக்கு போட்டியாக இருந்து வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிரடி விலை உயர்வு காரணமாக எலிவேட்டின் விற்பனை லேசாகப் பாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அதேசமயம், அதன் விற்பனையில் எந்த மாற்றமும் இருக்காது என்கிற நம்பிக்கை கருத்துகளும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஏனெனில், ஹோண்டாவை போலவே இந்தியாவின் பிற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வைச் செய்ய இருக்கின்றன.

ஆகையால், எலிவேட்டின் போட்டியாளர்களாக கருதப்படும் கார் மாடல்களின் விலையும் கணிசமாக உயர இருப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்தே எலிவேட்டின் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகின்றது. ஆனால், இதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இதுகுறித்த விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 7, 2024, 5:30 [IST]
English summary
Honda hiked elevate suv prices here is more details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+