இந்த மாதிரியெல்லாம் காரை தயாரிச்சு ஏன் இந்த ஹோண்டா மறச்சு வச்சிருக்கு! நைட் ஆச்சுனா பெட்ரூம்கூட தேவைப்படாது!
ஹோண்டா (Honda) நிறுவனம், இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் மாடலின் ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் ஓர் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. என்-பாக்ஸ் ஜாய் (N-Box Joy) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்துள்ளது. இது ஜப்பான் சந்தைக்கான வாகனம் என்பது கவனிக்கத்தகுந்தது. இது ஓர் மினி எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்த வாகனம் ஜப்பானுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் ஆகும்.
இதை புதிய அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவே, அதாவது, புதுப்பிக்கப்பட்ட வாகனமாகவே ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த காரில் ஹோண்டா சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், கேம்ப் செய்வதற்கான சகல வசதிகளையும் தாங்கிய வாகனமாக என்-பாக்ஸ் ஜாய் காரை ஹோண்டா தயார் செய்திருக்கின்றது.

ஆமாங்க, மினி எம்பிவி வாகனத்தை மினி கேம்ப் வாகனமாக ஹோண்டா மாற்றியுள்ளது. எனவே, குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் வெளியே ரூம் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களுக்கு இருக்காது. இதற்கேற்ப அனைத்து அம்சங்களையும் அது தாங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, கேபினை பெட்ரூமாக மாற்றிக் கொள்ளும் வசதிகூட இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, கேம்ப் அமைப்பதற்கான வசதிகளையும் இந்த என் பாக்ஸ் ஜாய் தாங்கியிருக்கும். ஜப்பான் சந்தையில் இந்த வகை வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே என் பாக்ஸ் ஜாய் எம்பிவிக்கு மினி கேம்ப் செய்யும் வசதியை ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

கூடுதல் சிறப்பாக இந்த வாகனத்திற்கு நான்கு வீல் டிரைவ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே எந்த மாதிரியான இடத்திற்கும் இந்த வாகனத்தை கொண்டு சென்றுவிட முடியும். ஹோண்டா என் பாக்ஸ் ஜாய், மாருதி வேகன்ஆர் காரை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்திருந்தோம். அதன் அளவும் அதற்கு இணையானதாகவே உள்ளது.
3,395 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம், 1,815 மிமீ உயரம் மற்றும் 2,520 மிமீ நீளமான வீல் ஆகிய அளவுகளிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் விற்கப்படும் வேகன்ஆர் கார் மாடலும் இதே அளவைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தை ரூ. 10.7 லட்சம் என்கிற விலையிலேயே ஜப்பானில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இதன் வருகை அந்நாட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சுஸுகி ஹஸ்ட்லர் டஃப் ஒயில்டு, ஸ்பேசியா கியர் போன்ற கார் மாடல்களுக்கே போட்டியாக அமைந்திருக்கின்றது. மூன்று பேர் மட்டுமே கொண்ட சிறிய குடும்பமாக இருப்பின் இந்த கார் கேம்ப் செய்ய மிகுந்த சிறந்த வாகனமாக இருக்கும்.
அதிக லக்கேஜ்களை ஏற்றிக் கொள்ள ஏதுவாக இந்த காரின் மேற்கூரையில் ரேக் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது .இதுதவிர, கேம்ப் அமைப்பதற்கான திரை, கொக்கிகள், மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட சேர் மற்றும் டேபிள்களும் வழங்கப்பட்டிருக்கும். எனவே ஹோண்டாவின் இந்த வாகனம் கையில் இருந்தால் வழியில் அல்லது வேறு எங்குமே தங்குவதற்கு தனியாக ரூம் வாடகைக்கு எடுக்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது.
இத்துடன், இந்த காரில் பயணிகள் சுலபமாக ஏறி-இறங்குவதற்காக ஸ்லைடிங் வகை டோர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 9 அங்குல இன்ஃபோடெயின் திரை, நீர் புகா வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் சிறிய பெட் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் அல்லது டர்போசார்ஜட் 658 சிசி, 3 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் அதிகபட்சமாக 58 பிஎச்பியையும், டர்போசார்ஜட் மோட்டார் 64 பிஎச்பி பவரையும் வெளியேற்றும். இத்துடனேயே 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதிகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை என்பதே இங்கே கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இப்படி ஒரே காரை வச்சுகிட்டு அதை ஏன் இந்த ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதேவேளையில், இப்போதே இந்தியாவில் கேம்ப் வாகனங்களுக்கு வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இருப்பினும், இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக எந்தவொரு நிறுவனமும் இதுவரை ஒரு காரைகூட விற்பனைக்கு வழங்கவில்லை. கார் ஆர்வலர்கள் தங்களின் வழக்கமான வாகனங்களையே கேம்ப் வசதிக் கொண்டதாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









