டாடா எல்லாம் ஓரமா போ! ஹோண்டா கார்லயும் இவ்வளவு சேஃப்டி கொண்டு வந்துட்டாங்க!

ஹோண்டா நிறுவனம் இன்று முதல் தனது கார்களின் விலையை உயர்த்தவும் அதே நேரம் தனது கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தவும் முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் எந்தெந்த கார்களில் விலை உயர்வு என்பது இருக்கிறது? புதிதாக என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2024-25-ம் நிதி ஆண்டு இன்று முதல் துவங்க உள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்த நிதியாண்டில் அதிகமான வருமானத்தை பெறுவதற்காக தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது ஹோண்டா நிறுவனம் தற்போது தனது வாகனங்களின் விலையை அதிகரித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

honda price hike

அதன்படி ஹோண்டா நிறுவனம் வாகனங்களின் விலையை மட்டும் அதிகரிக்காமல் வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையும் கூடுதலாக சேர்த்து வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இதன்படி ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒவ்வொன்றாக காணலாம். முதலாக ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் காரின் என்ட்ரி லெவல் வேரியன்டின் விற்பனை ரூபாய் 30,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எலவேட் காரின் எஸ்வி, விஎக்ஸ் ஆகிய வேரியன்ட்களிலும் ஹோண்டா சிட்டி காரின் எஸ்வி மற்றும் விஎக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் ஆறு ஏர்போக்குகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஹோண்டா எலவேட் காரில் கூடுதலாக 5 பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

honda price hike

இந்த 3 பாயிண்ட் சீட் பெட்டில் முன்பக்கம் உள்ள டிரைவர் மற்றும் பயணிகளுக்கான சீட் பெல்ட் மட்டும் சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் உள்ள டிரைவர் மற்றும் பயணி சீட்டில் அமர்பவர்களுக்கு வசதியாக வழங்கப்படும் சன் வைசர் ஃபிட்டிங்கில் வேலிட்டி மிரர் மட்டும் லிட் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்வி மற்றும் விஎக்ஸ் கார்களில் உள்ளே 7 இன்ச் கலர் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரைப் பொறுத்தவரை அனைத்து வேரியன்ட்களிலும் பின்பக்க சீட்டுகளுக்கும், சீட் பெல்ட் ரிமைண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எஸ்வி வேரியண்டில் 4.2 இன்ச் கலர் மல்டி இன்ஃபர்மேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. விஎக்ஸ் வேரியன்டை பொருத்தவரை 8 ஸ்பீக்கர் கொண்ட சரவுண்டு சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின்பக்க சன்ஷெட் ஆகிய வழங்கப்பட்டுள்ளன.

honda price hike

ஹோண்டா சிட்டி காரின் விலையை பொருத்தவரை ஹோண்டா எலவேட் காரின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளதோ அதேபோல சிட்டி காரின் விலையும் ரூபாய் 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் மற்றும் சிட்டி இ:எச்இவி ஆகிய கார்களின் வேரியண்ட்களை குறைத்துள்ளது. அதன்படி ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியண்டான சிட்டி இ:எச் இவி காரில் பின்பக்க சீட்டிலும் சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிட்டி இ:எச்இவி கார் இசட்எக்ஸ் என்ற ஒரே ஒரு வேரியண்டில் மட்டும்தான் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ரூ20.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுபோக ஹோண்டா அமேஸ் காரைப் பொறுத்தவரை தற்போது எஸ், விஎக்ஸ் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இ என்ற பேஸ் வேரியன்ட் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் ரூ7.93 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.

மத்திய அரசு வாகனங்களில் உள்ள சீட் பெல்ட் களுக்கு கட்டாயம் ரிமைண்டர் வழங்கப்பட வேண்டும் என கொண்டு வரப் போகும் விதியை மனதில் வைத்து ஹோண்டா நிறுவனம் இந்த அப்டேட்களை செய்துள்ளது. மேலும் 6 ஏர் பேக்குகள் விதிமுறையும் கட்டாயமாக உள்ளதை கணக்கிட்டு இந்த அப்டேட்களை செய்து ஹோண்டா நிறுவனம் தனது கார்களை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தனது காரின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது தான். அதன் காரணமாக அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு பக்கம் இருந்தாலும், பெரிய அளவில் விலை அதிகரிக்கப்படவில்லை என்பதால் இது விற்பனையில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 15:17 [IST]
English summary
Honda price hike 6 airbags standard across model range
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X