கஷ்டமர்களிடம் விற்ற கார்களை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வர சொல்லும் ஹோண்டா!.. அடிச்சுபுடுச்சு கிளம்ப போறாங்க!
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) இந்தியாவில் ஏற்கனவே விற்பனைச் செய்த கார்கள் சிலவற்றிற்கு மறு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பின் போது ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பொருட்டே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. நிறுவனம் சுமார் 92,500 யூனிட் கார்களுக்கே திரும்பி வர அழைப்பு விடுத்திருக்கின்றது. நிறுவனத்தின் ஏதோ ஓர் தயாரிப்பில் இல்லைங்க, பலதரப்பட்ட கார் மாடல்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஃப்யூவல் பம்ப்பிலேயே பிரச்னை ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. நவம்பர் தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்னையை சரி செய்யும் பணியில் ஹோண்டா களமிறங்க இருக்கின்றது. ஒவ்வொரு கட்டமாக இந்த பணியில் அது ஈடுபட இருக்கின்றது. ஆகையால், மொத்தமாக இல்லாமல் வாடிக்கையாளர்களை சிறுக சிறுக அழைத்து இந்த ப்யூவல் பம்ப்பில் ஏற்பட்ட பிரச்னையை ஹோண்டா சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல், நிறுவனம் இந்த பிரச்னையை எந்தவொரு கட்ணமும் இன்றியே சரி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், பாதிக்கப்பட்ட ஃப்யூவல் பம்ப் அகற்றப்பட்டு எந்தவொரு கட்டணும் இன்றி புதிய ஃப்யூவல் பம்ப் மாற்றி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜாஸ் (Jazz), பிரியோ (Brio), பிஆர்-வி (BR-V), டபிள்யூஆர்-வி (WR-V), சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) ஆகிய கார் மாடல்களே பாதிக்கப்பட்ட கார் மாடல்களாக கண்டறியப்பட்டு இருக்கின்றன.
இதில் தற்போது விற்பனையில் இல்லாத சில மாடல்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கார்களிலேயே தயாரிப்பு கோளாறு ஏற்பட்டு இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. நீண்ட காலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தி நிலையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது.
2017 ஆகஸ்டு மற்றும் 2018 ஜூன் ஆகிய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களே பிரச்னைகளுக்கு ஆளாகி இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் ஹோண்டா கார்கள் இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டவை என்றால் இந்த மறு அழைப்புகுறித்து காரை வாங்கிய நிர்வாகத்திடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது.
புதிதாக காரை வாங்கியவர்கள் மட்டுமல்ல இந்த கால கட்டத்தில் ஃப்யூவல் பம்ப்பை அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா கார் பாகங்கள் விற்பனையகங்கள் வாயிலாக தனியாக வாங்கி பொருத்தியவர்களும் இதுகுறித்து நிர்வாகத்திடம் விசாரிக்கலாம். இல்லை எனில் நீங்கள் உங்கள் வாகனத்தின் விஐஎன் நம்பரைச் சொல்லியும் இந்த மறு அழைப்பு குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.
ஸ்டார்ட் ஆகுவதில் சிக்கல் அல்லது தானாகவே ஆஃப் ஆகுவது போன்ற சிக்கலை உங்கள் ஹோண்டா கார்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் நீங்கள் நிர்வாகத்திடம் அதுகுறித்து கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். அதேவேளையில், ஹோண்டா நிறுவனமே அவர்கள் தரப்பில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களாக தேடிபிடித்து அழைக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் இதுபோன்று ஏற்கனவே விற்பனைச் செய்த வாகனங்களுக்கு மறு அழைப்பு விடுப்பது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் பல நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. அதேவேளையில், 92 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களுக்கு ஹோண்டா மறு அழைப்பு விடுத்திருப்பது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில் இந்த பிரச்னை அனைவருக்கும் சரி செய்யப்படும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








