ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!

உலகை சந்தையை மையப்படுத்தி பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) மூன்று புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார்களை யே இவி (Ye EV) எனும் புதுமுக பிராண்ட் கீழேயே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பிராண்டையும், புதிதாக உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் கார்களையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. சீன சந்தையில் வைத்தே இந்த கார்களை நிறுவனம் வெளியீடு செய்து இருக்கின்றது. இங்கேயே முதலில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Honda electric car unveiled

உலகின் மற்ற சந்தைகளைக் காட்டிலும் சீன சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விளைவாகவே ஹோண்டா இந்த சந்தையை மையப்படுத்தி தன்னுடைய யே இவி பிராண்ட் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்தே உலக சந்தையில் யே இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஆனால், 2026 ஆம் ஆண்டிலேயே அது அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், சீனாவில் 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள்ளாகே யே இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது.

யே இவி என்கிற பெயரில் இல்லாமல் மாற்று பெயரிலேயே அது உலக சந்தையைக் களம் காணும் என்பது கவனிக்கத்தகுந்தது. யே இவி, பி7 (P7) மற்றும் எஸ்7 (S7) என்கிற இரண்டு எஸ்யூவி வெர்ஷனிலும், ஜிடி செடான் கான்செப்ட் வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இவை ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதுதவிர, யே இவி ரேஞ்ஜில் இன்னும் சில மாடல்களையும் ஹோண்டா இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஹோண்டா யே இவி பி7 மற்றும் எஸ்7 இந்த இரண்டு எஸ்யூவி கார்களும் தனித்துவமான ஸ்டைலையும், அம்சங்களையும் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

ஆனால், தோற்றத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இரண்டிலும் சார்ஜிங் போர்ட் முன் பக்க ஃபெண்டரிலேயே இடம் பெற்றிருக்கின்றன. மேலும், இந்த எலெக்ட்ரிக் காரில் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட குரல் கட்டளை வசதி உள்ளிட்ட அட்வான்ஸ்டு அம்சங்கள்கூட வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல மிக முக்கியமான தொழில்நுட்ப வசதிகளை ஹோண்டா பி7 மற்றும் எஸ்7 எலெக்ட்ரிக் காரில் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் ரேஞ்ஜ் திறன் மற்றும் பேட்டரி பேக் விபரங்கள் உள்ளிட்டவை பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல், ஜிடி செடான் கான்செப்ட் காரையும் நிறுவனம் மிக அட்டகாசமானதாக தயாரித்து இருக்கின்றது. இது டெஸ்லா மற்றும் பிஒய்டி நிறுவனங்கின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு சவால் விடும் அழகிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மிகுந்த ஸ்போர்ட்டியான தோற்றமே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. பெரிய திரை, அதிக சொகுசான இருக்கைகள், அட்வான்ஸ்டு டெக்னாலஜி, தொட்டாலே மாறும் கியர் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களை இது தாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்தியாவில் ஹோண்டாவின் இந்த எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும் எனில் விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார்களுக்கு அது போட்டியாக மாறும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 12:31 [IST]
English summary
Honda unveiled ye ev electric cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+