இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!

இந்தியாவின் நம்பர் 1 கார் மாடலாக டாடா பஞ்ச் (Tata Punch) மாறி இருக்கின்றது. முந்தைய காலகட்டத்தில் நம்பர் 1 மட்டுமல்ல நம்பர் 2 மற்றும் நம்பர் 3 என பல இடங்களை மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் தயாரிப்புகளே ஆட்சி செய்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது டிரெண்ட் மாறி இருக்கின்றது.

இம்முறை முதல் மற்றும் இரண்டாவது இடத்தை மாருதி சுஸுகியின் தயாரிப்பு அல்லாத கார் மாடல்களே பிடித்திருக்கின்றன. ஆமாங்க, முதல் இரண்டு இடங்களை மாருதி சுஸுகி தற்போது இழந்திருக்கின்றது. முதல் இடத்தை டாடா பஞ்ச் கார் மாடலும், இரண்டாவது இடத்தை ஹூண்டாய் கிரெட்டா-வும் பிடித்திருக்கின்றன.

Tata punch

இதற்கு அடுத்தபடியாகவே மூன்றாவது இடத்தை மாருதி சுஸுகி வேகன்ஆர் பிடித்திருக்கின்றது. மூன்று மட்டுமல்ல அடுத்த 4, 5 மற்றும் ஆறாவது இடங்களையும் மாருதி சுஸுகியின் தயாரிப்புகளே பிடித்திருக்கின்றன. ஆனால், டாடா பஞ்ச் இடமிருந்து மாருதி சுஸுகி வாங்கி இருக்கும் அடி என்பது மிகவும் பலமான அடியாகும்.

எப்போதும் இந்தியாவின் நம்பர் 1 செல்லிங் கார் மாடலாக வேகன்ஆரே இருக்கும். ஆனால், இம்முறை புதிதாக டாடா பஞ்ச் அந்த இடத்தைப் பிடித்திருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் டாடா பஞ்ச் 17,547 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.

Tata punch 90 off roading

இதனாலேயே அது இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடல் என்கிற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 16,458 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று இரண்டாவது இடத்தை கிரெட்டா பிடித்துள்ளது. இதில் டாடா பஞ்ச் பெற்றிருப்பதோ 61 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த கார் மாடல் 10,894 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

இந்த நிலையிலேயே இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு மிக மிக அமோகமாக வளர்ந்துள்ளது. இதன் விளைவாகவே அது நாட்டின் நம்பர் செல்லிங் கார் மாடலாக மாறி இருக்கின்றது. இந்த அளவிற்கு அமோக வரவேற்பு அந்த கார் மாடலுக்கு கிடைப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

Tata punch mud trip

டாடா பஞ்ச் ஓர் குட்டி எஸ்யூவி (Micro SUV) கார் ஆகும். இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவின் குட்டி எஸ்யூவி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக டாடா பஞ்ச் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த காரை தன்னுடைய ஆல்ஃபா பிளாட்பாரத்தைக் கொண்டே தயாரித்துக் கொண்டிருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு திறனுக்கு பெயர்போனதே இந்த பிளாட்பாரம் ஆகும். எனவேதான் டாடா பஞ்ச் அனைத்திலும் மிக சிறந்த காராகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக பாதுகாப்பு விஷயத்தில் முன்னணி மற்றும் விலை உயர்ந்த கார் மாடல்களையே தலைதெறிக்க ஓடச் செய்யக் கூடிய தயாரிப்பாக பஞ்ச் உள்ளது.

Tata punch 90 degree open door

இது பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடல் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல வசதிகளையும், திறமைகளையும் இந்த கார் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், டாடா பஞ்சால் சற்று ஆழமான நீர் நிலைகளிலும் பயணிக்க முடியும். 370 மிமீ ஆழம் இருந்தாலும் அது சமாளித்துவிடும்.

இதற்கு அக்காரின் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸே காரணமாக உள்ளது. 187 மிமீட்டரே அதன் கிரவுண்ட் கிளிரயன்ஸ் ஆகும். இதுமட்டுமில்லைங்க, இதனால் செங்குத்தான பாதைகளிலும் சிரமிமின்றி பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. டாடா மோட்டார்ஸின் கூற்றுபடி, இதன் சாய்வு கோணம் 22.2 டிகிரி ஆகும். இந்த திறனே அதனால் சவாலான சாலையைகூட சமாளிக்கச் செய்துவிடுகின்றது.

Tata punch down drive

இந்த காரில் டாடா மோட்டார்ஸ் டிராக்சன் கன்ட்ரோலுடன் கூடிய 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனை வழங்குகின்றது. இது சகதி நிறைந்த அல்லது மண் பாங்கான சாலையை சமாளிக்க மிகுந்த உதவியாக இருக்கும். இத்துடன் இதன் எலெக்ட்ரானிக் சிஸ்டம் டயர் பிடிமானத்தை இழந்திருப்பதை தானாக கண்டறிந்து மற்ற டயர்களுக்கு இழுவை திறனை கடத்தும்.

இதுமாதிரியான திறனே பஞ்ச் காரை அதிக செயல்திறன்மிக்கதாக மாற்றி இருக்கின்றது. இத்துடனேயே பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு உறுதி செய்யும் விதமாக ஸ்வே எனும் புத்தம் புதிய தொழில்நுட்பத்தை டாடா பஞ்ச் காரில் வழங்கி இருக்கின்றது. இது அவசர காலத்தில் வேகமாக பிரேக்கை அழுத்தும்போது தேவையான கன்ட்ரோலையும், நிலை தன்மையையும் உறுதிப்படுத்தும்.

Tata punch water wading

இதுதவிர, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இரட்டை ஏர் பேக்குகள், பனி மின் விளக்கு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் மழை வந்தால் தானாக வைப்பாகும் வைப்பர்கள் போன்ற அம்சங்களையும் டாடா இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களும், அதிக உறுதியான கட்டுமானமே குளோபல் என்சிஏபி இடமிருந்து ஐந்து ஸ்டார்களை பஞ்ச் காருக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

இதன் விலையும் மிக அதிகம் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் டாடா பஞ்ச் ரூ. 6.13 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 10.20 லட்சம் ஆகும். இந்த காரை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று விதமான அவதாரங்களில் இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா பஞ்ச் பாதுகாப்பு விஷயத்தில் மட்டுமில்லைங்க தொழில்நுட்ப விஷயத்திலும் மிக சிறந்ததாக உள்ளது. புரஜெக்டர் வகை ஹெட்லைட், எல்இடி பகல் நேர மின் விளக்குகள், 90 டிகிரி வரை திறக்கும் கதவுகள் (சுலபமாக பயணிகளால் ஏறி-இறங்க முடியும்), குரல் வாயிலாக கன்ட்ரோல் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 அங்குல ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த சிறப்பம்சங்கள் மற்றும் காரணங்களினாலேயே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலாக டாடா பஞ்ச் எஸ்யூவி மாறி இருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்த கார் மாடல் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.

ஆகையால், இப்போது வாங்கிய அடியை அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் மாருதி சுஸுகி நம் டாடா மோட்டார்ஸிடம் இருந்து வாங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் டாடாவின் இன்டிகா இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருந்தது. இப்போது அதையே விற்பனையில் ஓவர்டேக் செய்யத் தொடங்கி இருக்கின்றது, புதிய டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 6:00 [IST]
English summary
How tata punch become india s best selling vehicle place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X