சீன நிறுவனத்துக்கு போட்டி சீன நிறுவனமேதான் போலிருக்கே! ஹூவாய் எலெக்ட்ரிக் கார் டெலிவரியையே தொடங்கிருச்சுங்க!
வாகன உற்பத்தியில் களமிறங்கிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஹூவாய் (Huawei)-ம் ஒன்றாகும். ஆனால், இந்த நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்-ஐபோல பின் வாங்கவில்லை. இது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பிளானை சமீபத்திலேயே பின் வாங்கியது. வெற்றிகரமாக கார் உற்பத்தியையே அது மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது.
உற்பத்தி பணிகளை மட்டுமே அது தொடங்கவில்லை தற்போது அது காரின் டெலிவரி பணிகளையும் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் நிறுவனமாக விளங்கும் ஹூவாய், முதல் கார் மாடலாக லக்சீட் எஸ்7 (Luxeed S7) எலெக்ட்ரிக் காரையே தயாரித்து இருக்கின்றது.

இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரை ஜப்பானைச் சேர்ந்த செரி ஆட்டோ (Chery Auto) உடன் இணைந்தே ஹூவாய் தயாரித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டாலும், டெலிவரி வழங்குவதில் சிக்கல் நிலவியது.
இதற்கு செமி கண்டக்டர் பற்றாக்குறையே காரணம் என நிறுவனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனிக்கிழமை முதலே இந்த பணிகள் தொடங்கி இருக்கின்றன. மிக பெரிய எண்ணிக்கையில் தற்போது லக்சீட் எஸ்7 எலெக்ட்ரிக் கார் டெலிவரிக்காக தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கார் மாடலுக்கு ஏற்கனவே ஆர்டர் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு நவம்பர் மாத இறுதி நிலவரப்படி சுமார் 20 ஆயிரம் ஆர்டர்களை செரி லக்சீடு எஸ்7 பெற்றிருந்ததாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
249,800 யுவான்களுக்கு இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் அந்த காரின் விலை 29.32 லட்சம் ரூபாய் ஆகும். இது ஓர் கூபே வகை செடான் ரக கார் மாடல் ஆகும். 4971 x 1963 x 1474 மிமீ ஆகிய அளவுகளிலேயே இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், இதன் வீல் 2940 மில்லி மீட்டர் ஆகும். இந்த காரின் உள் பக்கத்தில் அதிக இட வசதி இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் இ கால் கார் மாடலைக் காட்டிலும் அதிக இடவசதியை இது கொண்டிருக்குமாம்.
இதுமட்டுமல்ல டெஸ்லா மாடல் எஸ், மற்றும் போர்ஷே டேகேன் ஆகிய கார் மாடல்களைக் காட்டிலும் இது அதிக இட வசதியைத் தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. இந்த காரில் ஹார்மனி பவர்டு ஸ்மார்ட் காக்பிட் அம்சத்தைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், ஸ்மார்ட் டிரைவிங் வசதியை வழங்கும் விதமாக இதில் 3டி கார் கன்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 855 கிமீ ரேஞ்ஜை வழங்கும். உயர்நிலை தேர்வே இந்த அதிகபட்ச ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹுவாய் எஸ்7 எலெக்ட்ரிக் கார் ப்ரோ, மேக்ஸ், மேக்ஸ் பிளஸ் மற்றும் மேக்ஸ் ஆர்எஸ் ஆகிய நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இதில், ஆரம்ப நிலை தேர்வான ப்ரோ ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜையும், மேக்ஸ் 630 கிமீ ரேஞ்ஜையும், மேக்ஸ் பிளஸ் 705 கிமீ ரேஞ்ஜையும் ஓர் முழு சார்ஜில் வழங்கும். ரேஞ்ஜை போலவே தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த கார் மாடல் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் இருக்கின்றது.
அந்த அளவிற்கு அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை இது தனக்குள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, லிடார் மற்றும் அடாஸ் போன்ற அம்சங்கள் ஹூவாய் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில்தான் பிரபல செல்போன் உற்பத்தி நிறுவனமான சியோமி அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் எஸ்யூ7-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூவாய் எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் இந்த காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் சியோமி எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









