இவ்வளவு கம்மி விலைக்கு 7 சீட்டர் காரா? அதுவும் 20.4 கிமீ மைலேஜ் தருமா? என்ன காருங்க இது?

ஹூண்டாய் நிறுவனம் தனது மூன்று வரிசை சீட்டர் கொண்ட காண்டாக்ட் கிராஸ் ஓவர் எஸ்யூவியாக அல்கசார் என்ற எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது இந்த காரை நிறுவனம் தற்போது அப்டேட் செய்து புதிய அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் இன்று அதிகாரப்பூர்வமாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்போது புதிதாக செய்யப்பட்டுள்ள அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன இந்த காரில் உள்ள புதுமையான விஷயங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் தனது அல்கஸார் காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்திய போது தனது கிரெட்டா காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷன் காராக அறிமுகமானது. ஹூண்டாய் கிரெட்டா கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்த காரின் 3 சீட்டர் கொண்ட வெர்ஷன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில் இந்த தேவையை பூர்த்தி செய்யவே இந்த அல்கஸார் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

hyundai alcazar facelift model launch

இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு இந்த காரை அப்டேட் செய்து வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது உள்ள அல்கஸார் காரின் பல்வேறு மாடலில் சில மாற்றங்களையும், அதே நேரம் தற்போது மார்கெட்டில் உள்ள சில நவீன அம்சங்களையும் இந்த காரில் உட்புகுத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள அல்கஸார் கார் 6,7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் டிசைனை பொருத்தவரை முன்பக்கத்தில் H வடிவ எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. இது போக எல்இடி ஹெட்லைட்டுகள வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் முன்பக்கம் உள்ள ஹூட் பகுதி புதிய வடிவமைப்பில் உள்ளது. பம்பர் பகுதி ரக்கட் லுக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது போக புதிய ஸ்கிட் பிளேட்களும் டார்க் குரோம் நிற கிரில்களும் வழங்கப்ப்டடுள்ளது.

hyundai alcazar facelift model launch

இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்ட்டுள்ளன. இது இந்த காருக்கு போல்டான லுக்கை வழங்குகிறது. இது போல பாலம் வடிவமைப்பு கொண்ட ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு ஒரு எலிவேட் செய்யப்பட்ட ஸ்டான்ஸை வழங்குகிறது. இது காருக்கு சிறப்பான லுக் தருவதை உறுதி செய்கிறது.

இந்த காரின் பின்பக்கத்தை பொருத்தவரை புதிய ஸ்பாய்லர் ஸ்டாப் லைட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் கனெக்ட்டெட் டெயில் லைட் இந்த காருக்கு அகலமான மற்றும் உயரமான லுக்கை கொடுக்கிறது. இதில் உள்ள எல்இடி டர்ன் சிக்னல், சீக்கோன்ஷியல் ஃபங்ஷனில் இயங்கும் திறன் கொண்டது.

hyundai alcazar facelift model launch

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4560 மிமீ நீளமும், 1800 மிமீ அலகமும் 1710 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2760 மிமீ வீல் பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை பிரிமியம் மற்றும் சொகுசு அம்சங்கள் நிறைந்ததாக விவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தில் நோபிள் பிரெளன் மற்றும் ஹேஸ் நேவி கலரில் டூயன் டோன் உட்புற கட்மைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய அல்கஸார் காரின் 6சீட்டர் வேரியன்டை பொருத்தவரை 2வது வரிசை சீட் கேப்டன் சீட்களாக வழங்கப்பட்ள்ளது. இதில் மடக்கி வைக்ககூடிய ஆர்ம் ரெஸ்ட் இருப்பதால் 3வது வரிசை சீட்டிற்கு செல்வது சுலபமாக இருக்கும். 7 சீட்டர் வேரியண்டிலும் சீட்டை மடக்கும் அம்சம் இருப்பதால் 3வது வரிசை சீட்டில் பயணிப்பவர்களுக்கு உள்ளே ஏற,இறங்க வசதியாக இருக்கும். இந்த காரின் முதல் 2 வரிசை சீட்டுகள் வென்டிலேட்டட் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த காரில் 2வது வரிசை சீட்டை மடக்க பவர்டு சீட்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிரைவர் சீட் மெமரி ஃபங்ஷன், 8வழியிகளில் டிரைவர் மற்றும் பயணிகள் சீட்டை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதனால் நீண்ட தூர பயணத்திற்க ஏற்றதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரில் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு பயணமும் பல நினைவுகளை தரும் பயணமாக அமையும்.

இந்த புதிய அல்கஸார் காரில் பல்வேறு விதமான தொழிற்நுட்ப அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக என்எஃப்சி அம்சத்துடன் கூடிய டிஜிட்டல்கீ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் வாட்சை கார் கதவு அருகில் வைத்தாலோ காரை அன்லாக் செய்யலாம். மேலும் காருக்குள் ஏறியதும் வயர்லெஸ் சார்ஜரில் அதை வைத்தால் காரை ஸ்டார்ட் செய்து பயணிக்கலாம். ஒரு குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு இந்த டிஜிட்டல் கீ வழங்கப்படும்.

இந்த காரில் 70க்கும் அதிகமாக ப்ளூலிங்க் கனெக்டெட்ட கார் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 270க்கும் அதிகமான எம்பட் செய்யப்பட்ட விஆர் கமெண்ட், 10 விதமான ஆம்பியன்ஸ் சவுண்ட் மற்றும் 135 இந்தி மொழியில் வாய்ஸ் கமெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் காரில் பயணிக்கும் போது சிறந்த அனுபவத்தை பெற முடியும். இது பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த காரில் 10.25 இன்ச் கொண்ட இரண்டு ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும், மற்றொன்று டிஜிட்டல் கிளஸ்டராகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஒரு வருடத்திற்கு இலவசமக ஜியோ சாவன் மியூசிக் அப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை 10 ரிஜினல் மற்றும் 2 சர்வதேச மொழிகளில் பெற முடியும். மேலும் இந்த காரில் டூயல் டோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அல்கஸார் காரின் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் இன்ஜின்களில் தலா ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது இது 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அ்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

அடுத்த இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் யூ5 சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 85 கிலோ வாட் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளுது. இந்த காரின் மைலேஜ் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளன.

அதன்படி பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ மைலேஜையும், டிசிடி வேரியன்ட் 18 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மேனுவல் வேரியன்ட் 20.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 18.1 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. சிறிய ரக கார்களே இவ்வளவு மைலேஜை வழங்காத போது பெரிய கார் இவ்வளவு மைலேஜை வழங்குவது நிச்சயம் பலரை ஈர்த்துள்ளது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 70க்கும் அதிமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் , ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், முன்பக்க மோதல் வார்னிங், டிரைவர்அட்டென்ஷன் வார்னிங், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் 8 விதமான மோனோ டோன் மற்றும் 1 டூயல் டோன் கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. மொத்தம் 9 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ14.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் பெட்ரோல் இன்ஜின் காரும், ரூ15.99 லட்சம் என்ற விலையில் டீசல் இன்ஜின் காரும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கஸார் காரின் டிசைன் மற்றம் மற்ற அம்சங்கள் பலரை ஈர்க்கம் வகையில் உள்ளது. மேலும் இதில் பல்வேறு விதமாக தொழிற்நுட்ப அப்டேட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கார் புதிய வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈரக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறைவான விலையில் நல்ல மைலேஜ் தரும் காராக இருப்பதால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 13:20 [IST]
English summary
Hyundai alcazar facelift 2024 launch event latest updates design features engine and more in tami
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X