கல்யாணம் காட்சினா 2, 3 குடும்பத்தை ஒரே நடைல ஏத்தீட்டு போயிரலாம்! மாடு மாதிரி உழைக்கும் காரை களமிறக்க போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்கும்? என்பது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சூழலில் ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புற தோற்றம் எப்படி இருக்கும்? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்ளே ப்ரவுன் மற்றும் ப்ளூ கலரில் ட்யூயல் டோன் தீம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.

Hyundai Alcazar Facelift

இதில், 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் மிகவும் முக்கியமானவை ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப் வசதியும் ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் தவிர, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், போஸ் மியூசிக் சிஸ்டம் மற்றும் டிரைவர் இருக்கைக்கு மெமரி ஃபங்ஷன் போன்ற வசதிகளும் கூட, ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Hyundai Alcazar Facelift Interior

எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்றதாக இது இருக்கும். செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options), ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

இதில், டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் டீசல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், ஹூண்டாய் அல்கஸார் காரின் தற்போதைய மாடலை விட, ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். விலை எவ்வளவு? என்பது நமக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி தெரிந்து விடும். அன்றைய தினம்தான், ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 22:29 [IST]
English summary
Hyundai alcazar facelift interior features officially revealed full details
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+