குடும்பத்தோட போற மாதிரியான காரை வாங்கலாம்னு இருக்கீங்களா.. செப்டம்பர் 9 அன்றைக்கு சூப்பரான கார் வரபோகுது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக அல்கஸார் (Alcazar) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனையே ஹூண்டாய் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுக தேதி பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்றே இந்த கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஹூண்டாய் அல்கஸார் ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இந்த காரில் சிறிய குடும்பமாக இருந்தால் இரண்டு குடும்பம் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே புதுப்பித்திருக்கின்றது ஹூண்டாய் நிறுவனம்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு சிறப்புகளை இந்த காரில் ஹூண்டாய் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இதன் முன் பக்கத்திற்கு ஃப்ரஷ் தோற்றத்தை வழங்கும் விதமாக புதிய கிரில், எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் கவர்ச்சியான பம்பர் ஆகியவை அதில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மிக முக்கியமாக புதிய கிரெட்டாவை பிரதிபலிக்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், இதன் பக்கவாட்டு பகுதியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கூறப்படுகின்றது. அதேவேளையில், புதிய லுக்கை இதன் பக்கவாட்டு பகுதிக்கு வழங்கும் விதமாக புதிய தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் வெளியாகிய இந்த காரின் ஸ்பை படங்களும் இதையே உறுதி செய்கின்றன. மிக முக்கியமாக, மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான எல்இடி டிஆர்எல் (LED DRL) மற்றும் ஹெட்லைட் இந்த காரில் இடம் பெற இருப்பதை ஸ்பை படங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, ஃபேஸ்லிஃப்ட்-இன் கீழ் இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் புதிய நவீன கால தொழில்நுட்ப அம்சங்களையும் சேர்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், லெவல் 2 வகை அடாஸ், இரண்டு 10.25 அங்குல திரைகள், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் ஆகியவை சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இவை கூடுதல் பிரீமியமான டிராவல் அனுபவத்தைப் பெற வழிவகுக்கும். மேலும், தன்னுடைய போட்டியாளர்களுக்கு கூடுதல் போட்டியையும் இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாகவே ஹூண்டாய் அல்கஸார் விற்பனையில் இருக்கின்றது. இவற்றிற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போட்டியையே கூடுதலாக்கும் ஓர் முயற்சியாக இந்த காரை புதுப்பித்திருக்கின்றது ஹூண்டாய். ஆகையால், வரும் நாட்களில் மிகப் பெரிய எதிர்ப்பை இந்த ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் இடம் இருந்து மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக ஹூண்டாய் அல்கஸார் உள்ளது. அதன் 6 மற்றும் 7 இருக்கைகள் அமைப்பும், பாதுகாப்பு அம்சங்களுமே குடும்பங்களுக்கான காராக அல்கஸாரைக் காட்சியளிக்க செய்கின்றது. இந்த நிலையிலேயே இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஹூண்டாய் நிறுவனம் தற்போது புதுப்பிக்கப்பட்ட, அதாவது, அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய காராக அல்கஸாரை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








