இந்த காருல ரெண்டு குடும்பம்கூட போக முடியுமா! பட்டைய கிளப்ப வருது ஹூண்டாய் கார்! பாதுகாப்பும் தரமா கிடைக்கும்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் சீக்கிரமே அதன் புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் (Alcazar Facelift) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் அறிமுகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயால் உறுதி செய்யப்பட்ட நாளே இதுவாகும். எனவே இந்த காரின் வருகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பது தெரிகின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே புதிய அல்கஸார் காரின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான வேலையில் களமிறங்கி இருக்கின்றது, ஹூண்டாய்.

இதன் அடிப்படையில், புதிய அல்கஸார் காரின் டீசர் (Teaser)-ஐ அவ்வப்போது நிறுவனம் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. டீசர் படங்கள் அனைத்தும் ஃபேஸ்லிஃப்ட் அல்கஸாரின் கவர்ச்சியையும், புதிதாக இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களையும் வெளிக்காட்டும் வகையிலேயே இருக்கின்றன. அந்தவகையில், இப்போதும் சில படங்களை ஹூண்டாய் வெளியிட்டு இருக்கின்றது.

Hyundai alcazar facelift airbag

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசர் படங்கள் வாயிலாக ஹூண்டாய் நிறுவனம் என்ன தகவலை நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, இந்த டீசர் படத்தின் வாயிலாக என்ன அம்சம் அல்கஸாரில் இடம்பெற இருப்பதை ஹூண்டாய் உறுதி செய்திருக்கின்றது என்பது பற்றியே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் அடாஸ் அம்சம் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இத்துடன், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், புதிய கவர்ச்சியான தோற்றம் கொண்ட அலாய் வீல், திரை ரக ஏர் பேக்குகள் ஆகியவை இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

Hyundai alcazar facelift

இதுமட்டுமில்லைங்க, ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைண்ட் ஸ்பாட் வியூ மிர்ரர், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் மற்றும் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிரைவர் அட்டன்ஷன் வார்னிங் போன்ற அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அம்சங்களை ஹூண்டாய் தன்னுடைய ஸ்மார்ட் சென்ஸ் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வாயிலாகவே ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இது பாதுகாப்பான ரைடுக்கு வழிவகுக்கும். ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய புதிய அல்கஸார் கார் மாடலில் ஒட்டுமொத்தமாக 70 பாதுகாப்பு வசதிகளை வழங்க இருக்கின்றது.

Hyundai alcazar safety

இதில் 40க்கும் மேற்பட்ட அம்சங்கள் ஸ்டாண்டர்டாக அனைத்திலும் இடம் பெற்றிருக்கும். எனவே, பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த வாகனமாக புதிய ஹூண்டாய் அல்கஸார் இருக்கும் என தெரிகின்றது. மேலும், புதிய ஹூண்டாய் அல்கஸார் குடும்பத்துடன் பயணிக்க உகந்த வாகனமாகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

6 மற்றும் 7 இருக்கைகள் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பானதாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றையே சாவியாக பயன்படுத்தும் வசதி இந்த காரில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், மழை வந்தால் தானாக வைப் ஆகும் வைப்பர்கள், குரலுக்கு கட்டுப்படும் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், நான்கு வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவையே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

எனவே பாதுகாப்பான டிராவல் அனுபவம் மட்டுமல்ல சொகுசான பயண அனுபவமும் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரில் தாராளமாகக் கிடைக்கும் என தெரிகின்றது. மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் அல்கஸார் காரில் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதனால், இந்த கார் ஒன்று அல்ல இரண்டு குடும்பம்கூட பயணிப்பதற்கு ஏதுவான காராக இருக்கும் என தெரிகின்றது. மேலும், குடும்பத்துடன் பாதுகாப்பான பயணத்தைப் பெறுவதற்கான காராகவும் இது இருக்கும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 15:36 [IST]
English summary
Hyundai alcazar facelift safety innovations unveiled
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X