2, 3 குடும்பம் ஒன்னா போக கூடிய 7 சீட்டர் கார் இவ்ளோ மைலேஜ் தருதா! ஷோரூம்களுக்கு வர தொடங்கியதால் உற்சாகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar). இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரின் அடிப்படையில், ஹூண்டாய் அல்கஸார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அப்டேட் செய்யப்பட்ட 2024 ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் ஷோரூம்களுக்கு, 2024 அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது வர தொடங்கியுள்ளது.

2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் வரை மைலேஜ் (Mileage) வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hyundai Alcazar

அதே நேரத்தில் இந்த காரின் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 20.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். எனவே அதிகம் பேர் பயணிக்க வேண்டும், அதே நேரத்தில் மைலேஜூம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடியவர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், லெவல் 2 அடாஸ், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Hyundai Alcazar Airbags

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா, முதல் மற்றும் 2வது வரிசை இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி போன்ற அம்சங்களும், 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 9 கலர் ஆப்ஷன்கள் (Colour Options) வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு கிடைக்கும். அவை பிளாட்டினம், சிக்னேச்சர், ப்ரஸ்டீஜ் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் ஆகியவை ஆகும்.

இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 14.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 21.55 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) ஆகிய கார்களுக்கு எல்லாம், 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 23:10 [IST]
English summary
Hyundai alcazar facelift starts reaching dealerships video
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+