சாவியே தேவையில்லை! செல்போன் வாட்ச் வச்சே காரை ஸ்டார்ட் பண்ணிடலாம்!வேற என்னலாம் இருக்குது தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது அல்கஸார் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இன்று அதிகாரப்பூர்வமாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 14.99 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகி விற்பனையாக்கி தயாராக இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்நிலையில் இந்த காரில் உள்ள சில முக்கியமான அம்சங்கள் குறித்த விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது அல்கஸார் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன் கூட விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஆறு மற்றும் ஏழு சீட்டர் கொண்ட ஆப்ஷன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பல கார்களில் இல்லாத பல்வேறு விதமான சொகுசு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த காரில் உட்புகுத்தப்பட்டுள்ளது. இது நிச்சயம் பலரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

டிஜிட்டல்-கீ நான் பொதுவாக கார்களில் சாவியை பயன்படுத்தி உள்ளே ஏறவும், இறங்கவும் பயன்படுத்துவோம். அது போக கீலெஸ் என்ட்ரி கொண்ட தொழிற்நுட்பங்கள் எல்லாம் வந்துவிட்டன. இந்நிலையில் இது அடுத்த கட்ட பரிணாமத்திற்கு சென்று டிஜிட்டல் கீ தொழில்நுட்பம் இந்த காரில் உட்புகுத்தப்பட்டுள்ளது. இது என்எஃப்சி என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று செல்போன்,ஸ்மார்ட் வாட்ச்களில் என்எப்சி தொழில்நுட்பம் இருக்கிறது. இதனால் உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் காரின் கதவு அருகே கொண்டு சென்றாலே கார் தானாக அன்லாக் ஆகிவிடும். அது மட்டுமல்ல காரில் ஏறியதும் உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் கழட்டி வயர்லெஸ் சார்ஜரில் போட்டால் காரை ஸ்டார்ட் செய்ய முடியும்.

இப்படியாக சாவியே இல்லாமல் உங்கள் என்எஃப்சி தொழில்நுட்பத்தை வைத்து இந்த காரை இயக்கம் கூடிய வகையில் புதிய தொழில்நுட்ப கொண்டு வரப்பட்டுள்ளது. இது மூன்று நபர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஒரு குடும்பத்தில் மூன்று பேர் ஒரே காரை பயன்படுத்தினால் கூட அவரவர் செல்போன் அல்லது ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி இந்த காரை ஒட்டி செல்ல முடியும்.
இன்று பொதுவாக கார்களில் முன்பக்கம் டிரைவர் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் உள்ள சீட்டில் வென்டிலேட்டட் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பயணிப்பதற்கு இந்த வென்டிலேட்டட் சீட்டுகள் மிக உதவியாக இருக்கும். இந்நிலையில் ஹுண்டாய் நிறுவனம் தனது அல்கஸார் காரில் இரண்டாவது வரிசையில் உள்ள சீட்டுகளும் இப்படியாக வெண்டிலேட்டட் சீட்டுகளாக வழங்கி உள்ளார்கள்.

மேலும் உன் முன்பக்கம் உள்ள சீட்டை பின்பக்கம் இருந்து அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சீட்டுகளில் டேபிள்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. முக்கியமாக பின்பக்கம் இருக்கும் சீட்டிலும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. பல கார்களில் இப்படியான தொழில்நுட்பங்கள் எதுவும் இருக்காது. இது மிக சொகுசான கார்களில் வேண்டுமானால் இதில் ஒரு சில தொழில்நுட்பங்கள் இருக்கலாம்.
இன்று கார்களில் டூயல் ஸோன் ஏசி கண்ட்ரோல் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹுண்டாய் நிறுவனம் தனது அல்கஸார் காரில் இந்த ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு தனியான குளிர் வசதியும் பின்பகுதியில் இருப்பவர்களுக்கு தனியான குளிர் வசதியும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று புதிய கார்களில் இந்த அம்சங்கள் வந்தாலும் பெரிய அதிகளவிலான கார்களில் இந்த அம்சம் இருப்பதில்லை.
இது போக இந்த காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன முக்கியமாக 360° கேமரா, பானரோமிக் சன் ரூஃப், பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் சார்ஜிங், பத்து விதமான ஆம்பியன்ஸ் சவுண்ட், 8 ஸ்பீக்கர்கள், ஏசி கண்ட்ரோல் டச் பேனல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன பாதுகாப்புக்காக 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆல்கஸார் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரில் பல்வேறு விதமான புதிய அம்சங்கள் இருக்கின்றன. நிச்சயம் இது வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் முதல் மற்ற கார்களில் இல்லாத பல அம்சங்கள் இருப்பதால் இதன் விற்பனையும் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









