6, 7 பேர் குடும்பமாக பயணிக்க ஹூண்டாயின் புதிய கார்... என்னென்ன வசதிகள் மிஸ் ஆயிடுச்சு?

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் (Alcazar Facelift) காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்பு விற்பனையில் இருந்த அல்கஸார் காரை மேம்படுத்தி அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காராக அறிமுகம் செய்துள்ளனர். புதிய அல்கஸாரின் ஆரம்ப விலை ரூ.14.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விற்பனையில் இந்த காருக்கு மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் நேரெதிர் போட்டியாக உள்ளது. இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசங்களையும், இவை இரண்டில் எது சிறந்தது? என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலைகள்: புதிய ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள் முழுமையாக இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போதைக்கு காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.99 லட்சம் என்பது மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.98 லட்சத்தில் இருந்து ரூ.26.04 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

hyundai alcazar vs mahindra xuv700

பரிமாண அளவுகள்: புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரின் நீளம் 4560மிமீ, அகலம் 1800மிமீ, உயரம் 1710மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2760மிமீ ஆகும். மறுப்பக்கம், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் நீளம் 4695மிமீ, அகலம் 1890மிமீ, உயரம் 1755மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையே தூரம் 2750மிமீ ஆகும்.

தொழிற்நுட்ப வசதிகள்: அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எக்ஸ்யூவி700 என இரு கார்களிலும் எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ORVM-கள், 18-இன்ச் அலாய் சக்கரங்கள், 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே, பவர்டு டிரைவர் சீட், ஆட்டோமேட்டிக் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்ட்டட் கார் தொழிற்நுட்பம், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

hyundai alcazar vs mahindra xuv700

இவை மட்டுமின்றி இன்னும் நிறைய வசதிகள் இந்த இரு கார்களிலும் வழங்கப்படுகின்றன. எக்ஸ்யூவி700 காரில் கிடைக்காத, ஆனால் அல்கஸாரில் கிடைக்கக்கூடிய அம்சங்கள் என்று பார்த்தால், பின் இருக்கைகளுக்கும் வெண்டிலேட்டட் வசதி, பின் இருக்கை பயணிகளுக்கும் வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி மற்றும் எலக்ட்ரிக் போஸ் மோட் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

ஆனால், அல்கஸார் காரில் வயர்டு ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்‌ஷனை பெறலாம். அதுவே, எக்ஸ்யூவி700 காரில் இந்த கனெக்‌ஷன் ஆனது வயர்லெஸ் ஆக கிடைக்கும். அதேபோல், எக்ஸ்யூவி700 காரில் 12-ஸ்பீக்கர் சோனி ஆடியோ சிஸ்டமும், அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டில் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டமும் கிடைக்கும். அல்கஸாரில் 6 ஏர்பேக்குகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் எக்ஸ்யூவி700 காரில் ஒன்று கூடுதலாக 7 ஏர்பேக்குகளை பெறலாம்.

hyundai alcazar vs mahindra xuv700

என்ஜின்: எக்ஸ்யூவி700 காரை போலவே, புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், அல்கஸாரில் கிடைப்பவை அளவில் சிறியதான 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். ஆனால், எக்ஸ்யூவி700 காரில் பவர்ஃபுல்லான 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை மஹிந்திரா வழங்குகிறது.

அதேபோல், எக்ஸ்யூவி700 காரை மட்டுமே ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் வாங்க முடியும். அல்கஸாரில் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸையும், எக்ஸ்யூவி700 காரில் பெட்ரோல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் பெறலாம். டீசல் என்ஜின் உடன் இந்த இரு கார்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, அல்கஸாரை காட்டிலும் எக்ஸ்யூவி700 கார் நிறைய விஷயங்களில் மேம்பட்டதாக உள்ளது. ஆனால், மாடர்ன் தோற்றத்தில் கார் வாங்க விரும்புபவர்களுக்கு எக்ஸ்யூவி700 ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி, புதிய ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை ஓட்டி பார்த்தால்தான் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை இன்னும் உறுதியாக சொல்ல முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 8:00 [IST]
English summary
Hyundai alcazar facelift vs mahindra xuv700 check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X