3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கார் இவ்ளோ மைலேஜை தரதுலாம் பெரிய விஷயமுங்க.. 1-2 குடும்பம் வரை டிராவல் பண்ணலாம்

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்கஸார் (Alcazar Facelift) கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளுடன், நான்கு விதமான வேரியண்டுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட கார் மாடலின் மைலேஜ் பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. இதுபற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் எஞ்சின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டிசிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

Hyundai alcazar mileage revealed by arai

இதேபோல், டீசல் மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ மைலேஜை வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதேபோல், 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் வழங்கும். இதன் டீசல் - 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 18.1 கிமீ மைலேஜையும், டீசல் -6 ஸ்பீடு மேனுவல் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜை வழங்கும்.

இவை அனைத்தும் அராய் சான்றளித்த மைலேஜ் விபரங்கள் ஆகும். இதன் வாயிலாக புதிய ஹூண்டாய் அல்கஸார் சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமல்ல மைலேஜ் தரும் விஷயத்திலும் அதிக திறன்மிக்கது என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் டீசல் ஆப்ஷனே இருப்பதிலேயே அதிக மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றது.

இந்த பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அல்கஸார் ஓர் கிரெட்டாவின் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட வெர்ஷன் ஆகும். மேலும், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது.

இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தற்போது இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதுப்பித்தலின் கீழ் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் பலவற்றை அல்கஸார் காரில் ஹூண்டாய் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. குறிப்பாக அதன் லுக்கை மிகப் பெரிய அளவில் அப்கிரேட் செய்திருக்கின்றது.

ஆகையால், கூடுதல் கவர்ச்சியான அழகைக் கொண்ட கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. இதற்காக காரின் லைட்டிங் செட்-அப், கிரில், பம்பர், பக்கவாட்டு மற்றும் பின் பக்க பகுதி அனைத்திலும் ஹூண்டாய் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. குறிப்பாக, இதில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைட்லைட் மற்றும் டிஆர்எல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இதேபோல், காரின் உட்பக்கம் மனதை மயக்கக் கூடியதாகவே இருக்கின்றது. அந்தவகையில், புதிய ஹூண்டாய் அல்கஸார் காரில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக முன் பக்க இருக்கைகளுக்கு மட்டுமே இந்த அம்சம் வழங்கப்படும். ஆனால், புதிய அல்கஸார் கார் மாடலில் இரண்டாவது வரிசையிலும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகளே வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, டூயல் ஜோன் ஏசி கன்ட்ரோல் ஆப்ஷன், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பானரோமிக் சன் ரூஃப், பார்க்கிங் பிரேக், ஒயர்லெஸ் சார்ஜிங், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டச் கன்ட்ரோல் பேனல் கொண்ட ஏசி உள்ளிட்டவற்றை இந்த காரில் ஹூண்டாய் வழங்கியிருக்கின்றது.

தொடர்ந்து, பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதைவிட மிக முக்கியமாக இந்த காரில் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங்க, முன்பக்க மோதலை தவிர்க்கும் எச்சரிக்கை, டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக 70 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களையே இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

ஆனால், அல்கஸாரின் ஆரம்ப நிலை வேரியண்டுகளில் 40 வரையிலான பாதுகாப்பு அம்சங்களே இடம் பெற்றிருக்கும். ஹூண்டாய் நிறுவனம் அறிமுகமாக இந்த புதிய அல்கஸார் கார் மாடலுக்கு ரூ. 15 லட்சம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடாஸ் அம்சம் மற்றும் அதிக மைலேஜ் திறன் ஆகியவற்றைய புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்களின் கவனத்தை இந்த கார் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற காராகவும் இதனை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. எனவே, குடும்பஸ்தர்களுடன் சேர்த்து அதிகம் மைலேஜை விரும்புவர்களையும் இந்த கார் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் இந்த காரில் 6 முதல் 7 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 23:58 [IST]
English summary
Hyundai alcazar facelifts arai certified mileage revealed
மேலும்... #hyundai #hyundai alcazar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+