இது கார் உற்பத்தி ஆலையா!.. இல்ல வட சுட்டு போடுற கடையா!.. காரையே இவ்ளோ உற்பத்தி பண்ணியிருக்காங்க!
இந்தியாவில் விற்பனைக்குகக் கிடைக்கும் அதிக இருக்கைகள் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் அல்கஸார் (Alcazar)-ம் ஒன்றாகும். கிரெட்டா (Creta)-விற்கு அண்ணன் என இந்த கார் மாடலைக் கூறலாம். இந்த கார் மாடலே தற்போது உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த கார் 1 லட்சம் யூனிட் உற்பத்தியை எட்டி இருக்கின்றது. அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆகின்ற நிலையில், அதற்குள்ளாக அது 1 லட்சம் யூனிட் உற்பத்தியை எட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
18 ஜுன் 2021 அன்றே இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. அல்கஸார் ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் மாடலாகும். 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் இந்த கார் மாடல் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நடிகர் ஷாருக்கான் வாயிலாகவே இந்த நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த காரை ஹூண்டாய் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அக்காரின் உற்பத்தி 1,02,682 யூனிட்டுகளை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், 75,506 யூனிட்டுகள் உள்நாட்டிற்காகவும், 27,176 வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அறிமுக ஆண்டான 2021-22 நிதியாண்டில் 25,894 யூனிட்டுகள் இந்தியாவிற்கும், 2,887 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
அதேவேளையில், 2022-23 நிதியாண்டில் 26,696 யூனிட்டுகள் உள்நாட்டிலும், 11,334 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், 2023-24 நிதியாண்டில் 20,753 யூனிட்டுகள் உள்நாட்டிலும், 10,825 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. நடப்பு 2024-25 நிதியாண்டில் 2,163 யூனிட்டுகள் உள்நாட்டிலும், 2,130யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதுமாதிரியான சிறந்த வரவேற்பின் காரணத்தினாலேயே உற்பத்தியில் தற்போது அந்த கார் மாடல் வெறும் மூன்று ஆண்டுகளிலேயே 1 லட்சம் யூனிட்டுகளைக் கடந்திருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியிலேயே தற்போது ஹூண்டாய் உள்ளது. நிறுவனம் அல்கஸாரின் அப்டேட் வெர்ஷனை இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அப்டேட் அல்கஸார் சோதனையோட்டம் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே சீக்கிரமே அது நாட்டில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்கஸாரை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான புதிய க்ரெட்டாவை அடிப்படையாகக் கொண்டே ஹூண்டாய் மேம்படுத்தி இருக்கின்றது.
ஆகையால், அல்கஸாரின் லுக் மேலும் மேம்படுத்தப்பட்டதாக மாறி இருக்கின்றது. அதன் பிரீமியம் தோற்றத்திற்காக முன் பகுதி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, டூயல்-ஜோன் காலநிலை கட்டுப்பாட்டுக் கருவி, டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அல்கஸாரில் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
பாதுகாப்பு அம்சமாக 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் லெவல் 2 ADAS ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று புதிய ஹூண்டாய் அல்கஸார் காரில் இன்னும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், அதன் எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகின்றது.
160ஹெச்பி பவர் மற்றும் 253என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் ஜிடிஐ மற்றும் 113ஹெச்பி பவர் மற்றும் 250என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.5லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் ஆகியவையே தொடர்ந்து அல்கஸாரில் கிடைக்கும் என தெரிகின்றது. இந்தியாவில் ஹூண்டாய் அல்கஸார் ரூ. 16.77லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அல்கஸார் உற்பத்தியில் செய்திருக்கும் சாதனை ஹூண்டாய்க்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த காருக்கு அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டோருக்கு மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் உற்பத்தி சம்பவம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








