இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 4,883 அவ்ரா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 3,774 ஆக மட்டுமே இருந்தது. இது 29 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக, நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களின் பட்டியலில் ஹூண்டாய் அவ்ரா 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் முதல் இடத்தில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Hyundai Aura

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.05 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஹூண்டாய் அவ்ரா கார், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், சிஎன்ஜி என 2 வெர்ஷன்களிலும், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செடான் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது.

Hyundai Aura Interior Design

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஹூண்டாய் அவ்ரா காரின் பெட்ரோல்/மேனுவல் மற்றும் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அவ்ரா காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் ஒரு கிலோவிற்கு 22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் ஹூண்டாய் அவ்ரா காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில், மாருதி சுஸுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) போன்ற கார்களுடன், ஹூண்டாய் அவ்ரா போட்டியிட்டு வருகிறது. இந்த கார்களுக்கு ஹூண்டாய் அவ்ரா ஒரு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ஓரளவிற்கு குறைவான விலையில் நல்ல மைலேஜ் கிடைக்க கூடிய ஒரு செடான் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள நபர்கள், ஹூண்டாய் அவ்ரா காரை பரிசீலனை செய்யலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அடுத்தபடியாக க்ரெட்டா இவி (Creta EV) மற்றும் எக்ஸ்டர் இவி (Exter EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது.

இதில், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார், வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா இவி போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 21, 2024, 23:55 [IST]
English summary
Hyundai aura sales report march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+