ஆடி, பென்ஸ் நிறுவனங்களையே ஆட்டி பாக்க போகுதா ஹூண்டாய்! எல்லா சொகுசு கார் பிராண்டுகளுக்கும் ரெடியாகும் ஆப்பு!
இந்தியாவில் சொகுசு கார் (Luxury Car)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக பென்ஸ் (Benz), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் சில முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சென்ற ஆண்டில் இரட்டிப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக, சந்தையில் அதிக சொகுசு வசதிகளுடன் விற்பனைக்கு வரும் கார்களுக்கு இந்தியர்கள் மிக மிக அமோகமான வரவேற்பை வழங்கி இருக்கின்றனர். இதற்கு மற்றுமொரு சான்றாக பிஒய்டி (BYD) போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன. பிஒய்டி ஓர் சீனாவைச் சேர்ந்த பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் அது பிளான் போட்டதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களே நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழல் நிலவுகின்ற இந்த வேளையிலேயே ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பிரபல லக்சூரி பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் லக்சூரி கார் தயாரிப்பு பிராண்டாக ஜெனசிஸ் (Genesis) இருக்கின்றது. இந்த பிராண்டையே இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது ஹூண்டாய். ஜெனசிஸ் என்பது லெக்சஸ், ஆடி, மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற லக்சூரி கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
இந்த பிராண்டே இந்தியாவில் விரைவில் அதன் கால் தடத்தை பதிக்க இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்குள் அது அதன் கால் தடத்தைப் பதித்து விடும் என்றே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஜெனசிஸ் பிராண்டின் எஸ்யூவி (SUV) ரக காரே முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு டிமாண்ட் அதிகம் என்பதாலேயே இந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி ரக கார் மாடல்களாக ஜிவி 70 (GV 70), ஜிவி 80 (GV 80) மற்றும் ஜிவி 90 (GV 90) ஆகியவை இருக்கின்றன.
இதில் ஏதேனும் ஒன்றே இந்தியாவில் முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த கார் சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இந்த காரின் உற்பத்தி பணிகள் சென்னையில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் முக்கிய ஆலையை சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரம்புதூரிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஜெனசிஸ் பிராண்டு விற்பனைக்கு வரும் எனில் மெர்சிடிஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். இதுதவிர, லெக்சஸ் போன்ற பிராண்டுகளுக்கும் இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஹூண்டாய், ஜெனசிஸ்-இன் ஜி70 மாடலையே இந்தியாவில் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரும் என தெரிகின்றது. இந்த கார் மாடலை மிக சமீபத்திலேயே இன்றைய கால நடைமுறைக்கு ஏற்ப அப்டேட் செய்தது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடலைத் தொடர்ந்து, ஜிவி 80 மற்றும் ஜிவி 90 ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லக்சூரி கார் விற்பனை 2024 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவில் சுமார் 50 ஆயிரம் யூனிட்டுகள் சொகுசு கார்கள் 2023-24 நிதியாண்டில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஜெனசிஸ் அதன் கால்தடத்தை இந்தியாவில் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








