கார் விற்பனையில் ஹூண்டாயை நம்ம ஊர் டாடா மோட்டார்ஸால் முந்த முடியல! இந்தியாவில் கொரியன் கார்களுக்கு செம்ம மவுசு

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான இது கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கடந்த மாதத்தில் எத்தனை ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 2வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது என்றாலும், கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை முந்தி ஹூண்டாய் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.

hyundai cars sales report

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 50,201 ஆகும். ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் இதனை காட்டிலும் 500 கார்கள் குறைவாக, 49,701 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக கிரெட்டா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 15,447 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் இதனை காட்டிலும் 1,261 கார்கள் குறைவாக, 14,186 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

hyundai cars sales report

ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் 16,458 கிரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருதது. இந்த வகையில் மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய ஆயிரம் கிரெட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 9,120 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 ஏப்ரலில் இதனை காட்டிலும் 1,222 கார்கள் அதிகமாக 10,342 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் வென்யூ கார்களின் விற்பனை ஆனது 11.82% குறைந்துள்ளது. இந்த வரிசையில், 3வது இடத்தில் ஹூண்டாயின் லேட்டஸ்ட் அறிமுகமான எக்ஸ்டர் உள்ளது. இந்தியாவில் அதிகம் பேர் வாங்கும் எஸ்யூவி காராக மாறிவரும் எக்ஸ்டர் கடந்த மாதத்தில் மொத்தம் 7,756 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

hyundai cars sales report

2023 ஏப்ரல் சமயத்தில் எக்ஸ்டர் விற்பனையில் இல்லை. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 8,475 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எக்ஸ்டருக்கு அடுத்து, ஐ20 மற்றும் ஐ10 நியோஸ் கார்களை கடந்த மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐ20 கார்களின் எண்ணிக்கை 5,199 மற்றும் ஐ10 நியோஸ் கார்களின் எண்ணிக்கை 5,117 ஆகும்.

ஹூண்டாயின் செடான் ரக கார்களான அவ்ரா மற்றும் வெர்னா இந்த லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. இவை இரண்டும் முறையே கடந்த மாதத்தில் 4,526 மற்றும் 1,571 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8வது இடத்தில் ஹூண்டாய் அல்கஸார் 1,219 யூனிட்களின் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. இவை மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 201 டக்ஸன் கார்களையும், 45 ஐயோனிக் எலக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

hyundai cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 10 விதமான ஹூண்டாய் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸில் இருந்து 7 கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே, ஹூண்டாயை காட்டிலும் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் சில ஆயிரங்கள் குறைவாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 8:00 [IST]
English summary
Hyundai cars sales report 2024 april check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X