டாடா என்ன முயற்சித்தாலும் இது நடக்காது! ஹூண்டாய்க்கு எங்கேயோ மச்சம் இருக்கு... கிரெட்டா கை கொடுக்குது!!

ஹூண்டாய் (Hyundai) இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் வென்யூ கார்கள் இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 2வது மிக பெரும் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு முன்னால் மாருதி சுஸுகி மட்டுமே பெரிய வித்தியாசத்துடன் உள்ளது. டாடா மோட்டார்ஸுக்கும், ஹூண்டாய் நிறுவனத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், டாடாவை முந்தி ஹூண்டாய் 2வது இடத்தை தனதாக்கி வருகிறது.

hyundai cars october sales report

இது கடந்த 2024 அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 568 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. அதுவே, 2023 அக்டோபர் மாதத்தில் 55 ஆயிரத்து 128 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது 1% அதிகரித்துள்ளது.

வழக்கம்போல், கடந்த அக்டோபர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தை கிரெட்டா பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 497 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 அக்டோபர் மாதத்தில் 13 ஆயிரத்து 77 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 34% அதிகரித்துள்ளது.

hyundai cars october sales report

அதாவது, ஹூண்டாய் காரை வாங்குபவர்களில் 3இல் ஒருவர் நிச்சயமாக கிரெட்டாவை தேர்வு செய்கிறார். கிரெட்டாவுக்கு அடுத்து, அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக 2வது இடத்தில் வென்யூ உள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 901 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்திருப்பினும், வென்யூ கார்கள் விற்பனை ஆனது 2023 அக்டோபரை காட்டிலும் 6% குறைந்துள்ளது.

ஏனெனில் அந்த மாதத்தில் 11 ஆயிரத்து 581 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் 7 ஆயிரத்து 127 கார்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 அக்டோபர் மாதத்தில் 8 ஆயிரத்து 97 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கிராண்ட் ஐ10 நியோஸ் இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது.

hyundai cars october sales report

கடந்த மாதத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 235 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்களின் விற்பனை இந்த அளவிற்கு தான் இருந்தது என்றாலும், துல்லியமாக பார்த்தால் இந்த ஹூண்டாய் காரின் விற்பனை ஆனது 5% குறைந்துள்ளது. இதற்கடுத்து 5வது இடத்தில் ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார் உள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 354 ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தை அவ்ரா 4 ஆயிரத்து 805 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 7வது மற்றும் 8வது இடங்களில் அல்கஸார் மற்றும் வெர்னா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 2,204 மற்றும் 1,272 ஆகும். இவை மட்டுமின்றி, கடந்த மாதத்தில் 141 டக்ஸன் கார்கள் மற்றும் 32 ஐயோனிக்-5 எலக்ட்ரிக் கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் பிரதானமான நம்பிக்கைக்குரிய காராக கிரெட்டா விளங்குகிறது. மற்றப்படி, மற்றவைகளின் விற்பனை கணிசமாக கடந்த அக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் கார் என்றால் அது கிரெட்டா ஆகும். கிரெட்டா மட்டும் இல்லையென்றால், டாடா மோட்டார்ஸின் போட்டி ஹூண்டாய் நிறுவனத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 10, 2024, 22:15 [IST]
English summary
Hyundai cars sales report 2024 october creta usual first in list check all details here
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X