பைக் விலையில் புதிய காரை களமிறக்கும் ஹூண்டாய்! எப்புட்றா என மண்டையை பிச்சுக்கும் போட்டி நிறுவனங்கள்!
இந்திய சந்தையில் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) போன்ற மைக்ரோ எஸ்யூவி கார்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.
எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஹூண்டாய் நிறுவனம் ஒரு படி மேலே போய் இரண்டாவதாக ஒரு மைக்ரோ எஸ்யூவி காரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து மேலும் ஒரு மைக்ரோ எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு கொண்டுள்ளதாக நீண்ட காலமாக செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன.

இந்த யூகங்களை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் காஸ்பர் (Hyundai Casper) என்ற பெயரை தற்போது பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் என்பது வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஒரு மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும்.
இது இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரை விட நீளத்தில் சற்றே சிறியது. இந்த பெயரை பதிவு செய்துள்ளதால், ஹூண்டாய் நிறுவனம் காஸ்பர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் காஸ்பர் காரின் நீளம் 3,595 மிமீ ஆகவும், அகலம் 1,595 மிமீ ஆகவும், உயரம் 1,575 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,400 மிமீ ஆகவும் இருக்கலாம். செயல்திறனை பொறுத்தவரையில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இதைக்காட்டிலும் குறைவான விலையில் ஹூண்டாய் காஸ்பர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது 5 லட்ச ரூபாய் அல்லது 5.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் காஸ்பர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 5 லட்ச ரூபாய் என்ற அளவில் அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் காஸ்பர் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு சில பீரிமியம் பைக்குகளின் விலையை விட குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூடிய விரைவில் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








