நின்ன இடத்துல இருந்தே சுத்தும்.. அப்படியே சைடு வாக்கா நகர்ந்தும் போகும்.. ஹூண்டாயோட இந்த காரு வேற லெவலுங்க!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), யாராலும் நம்ப முடியாத அம்சங்கள் மற்றும் வசதிகள் நிறைந்த கார் ஒன்றை தயாரித்து இருக்கின்றது. அந்த கார் நின்ற இடத்தில் இருந்தே சுத்தும் மற்றும் அப்படியே பக்கவாட்டாக நகர்ந்தும் செல்லும் என்று கூறப்படுகின்றது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், தற்போது உலக வாகன காதலர்களைக் கவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் அது ஓர் தனித்துவமான வசதிகள் கொண்ட காரை அது வடிவமைத்து இருக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் சில அம்சங்கள் இப்போது விற்பனையில் இருக்கும் எந்த கார்களிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக முக்கியமாக மும்முனை பாயிண்ட் திருப்பம் வசதியை இந்த கார் கொண்டிருக்கின்றது. அதாவது, நின்ற இடத்தில் இருந்தே ஹூண்டாய் தயாரித்து இருக்கும் இந்த வாகனம் சுற்றும். இதுதவிர, சைடுவாக்கிலேயே அது நகரவும் செய்யும். இத்தகைய தனித்துவமான வசதிக் கொண்ட காரையே ஹூண்டாய் தற்போது ரெடி செய்திருக்கின்றது.
இந்த வசதியை இப்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு கார் மாடலிலும் நம்மால் பார்க்க முடியாது. அதேவேளையில், ஹம்மர் சில முன்னணி கார் உற்பத்தியாளர்கள் தங்களின் எதிர்கால கார்களில் இத்தகைய அம்சத்தை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஹூண்டாயும் தன்னுடைய புதிய காரில் கிராப் வால்க் (நண்டு நடை) எனப்படும் பக்கவாட்டாக நடக்கும் திறனை வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

மேலும், இதன் கான்செப்ட் மாடலையே தற்போது அந்நிறுவனம் வெளியீடும் செய்திருக்கின்றது. இந்த கான்செப்டிற்கு அது மொபியன் (Mobion Concept) எனும் பெயரை சூட்டி இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை தழுவியே மொபியன் அல்லது மொபிஸ் என்றழைக்கப்படும் இந்த கான்செப்ட்டை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது.
இருப்பினும் இதில் சில தனித்துவமான அம்சங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. அந்தவகையில், தனித்துவமான லைட்டுகள், பம்பர் மற்றும் வீல்களை மொபியானில் பார்க்க முடிகின்றது. இத்துடன், அடுத்த தலைமுறை இ-கார்னர் சிஸ்டத்தையும் இந்த காரில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுவே காரின் முன் மற்றும் பின் வீல்களை கன்ட்ரோல் செய்ய உதவியாக இருக்கின்றன.

இந்த திறனே காரை நண்டு போல் பக்கவாட்டாக நகரும் உதவியாக இருக்கிறது. ஒரே பெரிய ஒவ்வொரு ஆக்ஸில்களிலும் பொருத்துவதற்காக இந்த காரின் அனைத்து வீல்களிலும் ஒவ்வொரு தனிதனி மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அவை சற்று சிறியதாக இருக்கும். இது ஒவ்வொரு வீல்களையம் தனியாக இயங்க உதவும்.
மேலும், பிரேக், ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப்பையும் இவை இன்டிபென்டென்டாகவே பெற்றிருக்கின்றன. மேலும், இந்த காரில் முன் மற்றும் பின் பக்கத்தில் தனித்துவமான எல்இடி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கும். அந்த லைட்டுகள் சென்சார் வசதிக் கொண்டதாகும். முன்னால் பாதசாரிகள் நடந்து சென்றால் அதை டிடெக்ட் செய்து பாதசாரிகள் எந்த பக்கம் நோக்கி நகர்கின்றார்களோ அதைக் காண்பிக்கும்.
பின்னால் உள்ள லைட்டுகள் பாதசாரிகள் முன்னால் இருப்பதைக் காண்பித்து தொடர்ந்து வரும் வாகனங்களை ஓவர்டேக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கும். இதற்காக லிடார் (LiDAR) சென்சார்களே இந்த லைட்டுகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த காரில் கிரவுண்ட் புரஜெக்சன் லைட்டுகள் என தனி லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இது தரையில் கார் திரும்பும் திசையைச் சுட்டிக் காட்டும். இதுபோன்று இன்னும் பல சிறப்பான வசதிகளைத் தாங்கியதாகவே ஹூண்டாயின் இந்த கார் உள்ளது. இது ஓர் மின்சார கார் மாடல் ஆகும். இதன் ரேஞ்ஜ் திறன் மற்றும் மின்சார மோட்டார் பவர் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாயின் இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 600 கிமீ முதல் 800 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இந்த காரை எப்போது உற்பத்தி செய்யத் தொடங்கும், விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரத்தையும் ஹூண்டாய் வெளியிடவில்லை. இருப்பினும், இப்போதே இந்த வாகனம் மின்சார கார் ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக கவரத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications









