3 மாசத்துல 1 லட்சம் பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்க! அப்படி இந்த கார்ல என்னதாங்க இருக்குது!
ஹூண்டாய் நிறுவனத்தின் கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் இந்த காரை ஒரு லட்சம் பேர் புக் செய்துள்ளார்கள் என தற்போது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடையில் விற்பனைக்கு அறிமுகமான நிலையில் காத்திருந்த அனைவரும் இந்த காரை புக் செய்துள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிகப் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. மக்கள் நம்பிக்கை பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்பாளராக இருக்கும் என இந்திய மக்கள் நம்பி இந்த நிறுவனத்தின் கார்களை எல்லாம் வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா என்ற எஸ்யூவி கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் நல்ல விற்பனையில் இருக்கும் கார் என்பதால் இந்த காரை அப்டேட் செய்து வெளியிட ஹூண்டாய் முடிவு செய்தது. அதன்படி இந்த காரின் அப்டேட் வெர்ஷன் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்காக அறிமுகமானது.
இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது முதல் எதிர்பாராத அளவு பல்வேறு புக்கிங்கள் வந்தன. புக்கிங்களிலேயே சாதனைகள் எல்லாம் இந்த கார் படைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 50 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்து இருந்தார்கள். கடந்த மார்ச் மாதம் 80 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்து இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சம் பேர் இந்த காரை புக் செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்கள்.
இதற்கு முன்னர் இதே செக்மெண்டில் உள்ள கியா செல்டோஸ் கார் ஒரு லட்சம் புக்கிங் பெற ஆறு மாதம் வரை எடுத்துக் கொண்டது. ஆனால் இந்த கார் வெறும் மூன்று மாதத்திலேயே ஒரு லட்சம் புக்கிங் உள்ளது. அதாவது 1 லட்சம் பேர் இந்த காரை புக் செய்துள்ளனர்.
அப்டேட் செய்யப்பட்ட ஹுண்டாய் கிரெக்டா எஸ்யூவி காரை பொறுத்தவரை தற்போது ரூபாய் 11 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் இ, இஎக்ஸ், எஸ், எஸ்ஓ, எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டெக் மற்றும் எஸ் எக்ஸ் ஒ ஆகிய 7 வேரியன்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் சமீபத்தில் தான் ரூ10, 800 வரை விலை உயர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டா கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளதால் தொடர்ந்து அதில் அப்டேட் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களை பொருத்தி இந்த காரை அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கார் போட்டி கார்களுக்கு இணையாக பல்வேறு அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஹூண்டாய் கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் வெளியிட திட்டமிட்டு வருகிறது0 இந்த கார் 2024-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் கிரெக்டா எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தால் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.
அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ள ஹுண்டாய் கிரெட்டா காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது இது 115 பிஎஸ் பவரையும் 143.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.
அடுத்ததாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது .216 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் எல்லாம் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், சிவிடி கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கிரெட்டா காருக்கு மார்க்கெட் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால் இது விற்பனை அதிகரித்து வருகிறது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய பின்னணியில் தற்போது ஒரு லட்சம் பேர் இந்த காரை புக் செய்துள்ளார்கள். இன்னும் இந்த புக்கிங் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








