ரூ.11 லட்சத்திற்கு கிடைக்குற கிரெட்டா கார் மாதிரியே தெரியலயே!! உங்க காரையும் மாற்றிக் கொள்ளலாம்!
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மக்கள் அதிகமானோர் வாங்கும் எஸ்யூவி கார்களுள் ஒன்று. பக்கா கொரியன்-ஸ்டைல் காரான கிரெட்டா இந்த ஆண்டு துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்டது. இதன் விளைவாக, இந்தியாவில் கிரெட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், கிரெட்டா கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், இங்கு ஒரு விலை குறைவான கிரெட்டா கார் விலையுயர்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கிரெட்டா காரை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
இந்தியாவில் முதன்முதலாக 2015ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹூண்டாய் கிரெட்டா கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. 2015இல் இருந்து பலமுறை கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கிரெட்டா கார்களின் விற்பனை பெரியதாக சரிந்ததே கிடையாது என சொல்லலாம்.

அதேநேரம் கிரெட்டா காரை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள நிறைய கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களையும் ஹூண்டாய் வழங்குகிறது. இதன் மூலமாக மாற்றப்பட்ட கிரெட்டா கார்கள் பலவற்றை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் கிரெட்டா காரின் எண்ட்ரீ-லெவல் இ வேரியண்ட் ஸ்பெஷல் காக்கி எடிசன் போன்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த கிரெட்டா கார் தொடர்பான வீடியோ விக் ஆட்டோ ஆக்ஸஸரீஸ் என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெட்டா காரை பரவலாக சாலைகளில் காண முடியும். ஆனால், அடர் பச்சை நிறத்தில் காண முடியாது. அவ்வாறான காக்கி நிறத்திற்குதான் இந்த கிரெட்டா கார் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் மாற்றங்கள் என்று பார்த்தால், காரின் முன்பக்கத்தில் பாராமெட்ரிக் கருப்பு நிறத்தில் க்ரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய கிரில்லை கிரெட்டாவின் உயர்நிலை வேரியண்ட்களில் மட்டுமே காண முடியும். அதேபோல், ஹலோஜன் விளக்குகள் எல்இடி-ஆக மாற்றப்பட்டுள்ளன. ஹெட்லைட்களை இணைக்கும் வகையில் லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் கிரெட்டாவின் டாப் வேரியண்ட்களில் இருந்து எடுக்கப்பட்டது போல் உள்ளது.
கிரெட்டாவின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் எலக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய ORVM-களையும், அவற்றில் டர்ன் சிக்னல்களையும் பார்க்க முடியாது. ஆனால், அவை இந்த குறிப்பிட்ட கிரெட்டா பேஸ் வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்க ஃபெண்டரில் காற்றோட்டத்திற்காக துளை வழங்கப்பட்டுள்ளதை காணலாம். காரின் மேற்கூரையில் வழங்கப்படும் கம்பிகள் உள்பட சில பாகங்கள் பளபளப்பான கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

காருக்குள் எளிதாக ஏறவும், இறங்கவும் படிக்கட்டு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. காருக்கு பின்னால், ஏபிஎஸ் ஸ்பாய்லர் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பாய்லர் ஆனது இந்தோனிஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெட்லைட்களை போன்று, பின்பக்கத்தில் டெயில்லைட்களும் விலையுயர்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.
காருக்கு உள்ளே நிறைய இடங்களில் மென்மையான மெட்டீரியல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்டேரிங் சக்கரம், டோர் ஆர்ம் ரெஸ்ட் மற்றும் முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட பாகங்களில் லெதர் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகளுக்கு கவர்கள் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும், 7டி மேட்களும் காருக்குள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஸ்பீக்கர்கள், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவையும் காருக்குள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலர் அதிக விலையில் காரை வாங்குகின்றனர். ஆனால், ஒரு சிலரோ இவ்வாறு குறைந்த விலையில் காரை வாங்கி அதனை விலைமிக்கதாக மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதற்கு கூடுதலாக செலவாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த குறிப்பிட்ட கிரெட்டா காரை இவ்வாறு மாற்றுவதற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த விபரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications









