வெறும் ரூ 2 லட்சம் இருந்தா கிரெட்டா காரை வாங்கிடாலமா? இது சூப்பரான மேட்டரா இருக்குதே!
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு கார்கள் மார்க்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக கிரெட்டா கார் தான் இருக்கிறது. இந்த காரை உங்கள் கையில் வெறும் ரூ 2 லட்சம் இருந்தால் போதும் வாங்கிவிடலாம் என சொன்னால் நம்ப முடிகிறதா? இது எப்படி என்ற விவரங்களை தான் இங்கே காண போகிறோம்.
ஹூண்டாய் கிரெட்டா காரின் பேஸ் வேரியண்ட் காரான இ என்ற வேரியன்ம் கார் தான் தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 11 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை என்பது தான் இது போக கூடுதலாக பதிவு வரி, ஆர்டிஓ கட்டணங்கள், எல்லாம் இருக்கும் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டிய அனைத்து கட்டணமும் சேர்த்து ஆன் ரோடு விலையாக ரூபாய் 12.73 லட்சம் என்ற விலையில் இந்த காரை நாம் நம்மால் வாங்க முடியும்.

இது 45,300 இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் 10,999 ரூபாய் டிசிஎஸ் வரி உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் சேர்ந்ததாககும். இதில் ஃபாஸ்ட் டேக் கார்டும் உடன் சேரும். மொத்தம் ரூ 12,73,662 ஆன்ரோடு விலையாக இருக்கிறது இந்த ஆன்ரோடு விலை டில்லியில் உள்ள ஆன்ரோடு விலை தான் ஒவ்வொரு நகருக்கும் இந்த ஆன்ரோடு விலை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது.
நீங்கள் இந்த ஹூண்டாய் கிரெக்டா காரின் இ வேரியன்ட் காரை லோன் மூலம் வாங்கினால் உங்களுக்கு ஷோரூம் விலை பைனான்ஸாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி பார்த்தால் நீங்கள் ரூபாய் இரண்டு லட்சத்தை போதும்0 பாக்கி உள்ள பணம் முழுவதும் உங்களுக்கு கடனாக வழங்கப்படும். இந்த கடனாக வழங்கப்படும் பணம் என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும் என்பதையும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ரூ 2 லட்சத்தை முன் பணமாக செலுத்தினால் உங்களுக்கு ரூ10,73,672 கடனாக இருக்கும். இந்த கடனை நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த கடனை நீங்கள் ஆண்டிற்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு செலுத்தும் பட்சத்தில் மாதம் 17,774 இஎம்ஐயாக செலுத்த வேண்டும். இதன் மூலம் குறைவான கட்டணத்தில் இந்த காரை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஹோண்டா எலவேட், டாடா ஹாரியர், மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக விற்பனையாகி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு தனி மவுசு இருக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 17.4 கிலோ மீட்டர் முதல் 21.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் வேரியன்டை மாறுப்படுகிறது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4330 மிமீ நீளமும் 1790 மிமீ அகலமும் 2210 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 5 சீட்டர் மற்றும் 4 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதுபோக இந்த காரில் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, ஏபிஎஸ், அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
ஹூண்டாய் கிரெட்டா காரில் அடாஸ் தொழிற்நுட்பங்கள் இருக்கிறது. தொழில்நுட்பத்தில் முன்பக்க மோதுதல் வார்னிங், ப்ளைன்ட் ஸ்பாட் அவாய்டென்ஸ், லேண்ட் டிபார்ச்சர் வார்னிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதுபோக லைவ் லொகேஷன் ஷேரிங், கூகுள் அலெக்ஸா கனக்ட்டிவிட்டி பட்டன் ஆகிய அம்சங்களும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா பிரபலமான காராக இருப்பதால் இந்த காரை வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டும் என பல யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கையில் ரூபாய் 2 லட்சம் இருந்தால் இந்த காரை சொந்தமாக வாங்கிவிடலாம். அதன் பிறகு மாத இஎம்ஐ செலுத்தினாலே போதுமானதாக இருக்கும். இந்த தகவல் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் இந்த காரை நிச்சயம் ஒரு ஆப்ஷனாக வைத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









