21.8 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்கும் முன் இந்த விஷயத்தை கவனமா பார்த்து தேர்வு பண்ணுங்க!

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற காராக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக மக்கள் இந்த காரை அதிக எண்ணிக்கையில் வாங்கி வருகிறார்கள். இதனால் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த காரை வாங்க நினைக்கும் மக்கள் இந்த காரில் எந்த இன்ஜின் ஆப்ஷன் கொண்ட வாகனத்தை வாங்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கத்தை இங்கே வழங்கி உள்ளோம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் அந்த நிறுவனத்திலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரை வாங்கும் மக்கள் பலர் குடும்ப பயன்பாட்டிற்காக அதிகம் வாங்குகிறார்கள். சாலையில் செல்லும்போது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இந்த காரின் வடிவமைப்பு இருப்பதும் இந்த காரின் விற்பனைக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

hyundai creta engine options

இந்த காரை வாங்க நினைக்கும் பலர் இதில் எந்த இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரை வாங்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை பொறுத்த வரை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களும் வருகிறது.

இதில் ஒவ்வொரு இன்ஜின் ஆப்ஷனும் ஒவ்வொரு விதமான பவரை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு நீங்கள் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியமாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயன்பாடு இருப்பதால் தான் இந்த மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களையும் ஒரே காரில் வழங்கியுள்ளார்கள். உங்கள் பயன்பாட்டை முதலில் தெரிந்து கொள்ளவும். அதன் பிறகு இன்ஜினை தேர்வு செய்வது பற்றி யோசிக்க வேண்டும்.

hyundai creta engine options

1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொருத்தவரை நீண்ட தூரம் பயணம் செய்யும் தேவை உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த கார் இன்ஜின் ஸ்மூத்தாக நீண்ட நேரம் செயல்படும் அம்சம் கொண்டதாகவும் அதே நேரம் 21.8 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தினால் 19.1 கிலோமீட்டர் மைலேஜ் தான் கிடைக்கும்.

இந்த இன்ஜினை பொறுத்தவரை எஸ்எக்ஸ் வேரியன்ட்டை தவிர மற்ற அனைத்து வேரியன்ட்களிலும் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை ஸ்மூத்தான இன்ஜினாக இருக்கிறது. இது சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற இன்ஜின் அதேநேரம் ஹைவேயிலும் இந்த இன்ஜின் பயணிக்க உதவும். இந்த இன்ஜின் 6ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.

hyundai creta engine options

அடுத்ததாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது பவர்ஃபுல்லான இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. பவர்ஃபுல்லான பெர்பார்மன்ஸை விரும்புபவர்கள் இந்த இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

கிராமப்பகுதியில் வசிப்பவர்கள் அல்லது அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் பவர்ஃபுல்லான பயணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த இன்ஜின் ஆப்ஷன் சிறந்ததாக இருக்கும். நீண்டதூர பயன்பாட்டிற்கு இந்த இன்ஜின் ஆப்ஷன் சிறந்ததாக இருக்காது. இதன் மைலேஜ் குறைவாக தான் இருக்கும். குறைந்த தூரம் அதே நேரம் பவர்ஃபுல்லான பெர்பார்மன்ஸ் தேவை என்றால் இந்த இன்ஜின் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். இல்லையென்றால் உங்களுக்கு டீசல் அல்லது நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் பெஸ்ட்.

உங்களுக்கு வாகனத்தின் மைலேஜ் தான் மிக முக்கியமான விஷயம் என்றால் நீங்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்வது தான் பெஸ்ட் இன்ஜின் ஆப்ஷன் தான். 21.8 கிலோமீட்டர் மைலேஜ் உங்களுக்கு தரும். பலர் இந்த ஆப்ஷன் கொண்ட இன்ஜினை தேர்வு செய்து வாங்குகிறார்கள். பெரும்பாலான வேரியன்ட்களில் இந்த இன்ஜின் ஆப்ஷன் விற்பனையில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த கிரெட்டா காரின் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்து வழங்கும்போதே ஒவ்வொரு விதமான வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வழங்கி உள்ளது. அதனால் உங்களின் தேவை என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்வது தான் பெஸ்ட் அதுதான். உங்களுக்கு நல்ல ரிசல்டையும் தரும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2024, 16:39 [IST]
English summary
Hyundai creta best engine options and mileage details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X