மைலேஜை வாரி வழங்கும் புதிய காரை உருவாக்கும் ஹூண்டாய்!! ரோடு டெஸ்ட்டிங் ஸ்டார்ட்... அறிமுகம் எப்போது?

இந்தியாவில் புதிய சிஎன்ஜி கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கிட்டத்தட்ட அதன் அனைத்து கார்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கிவிட்டது. அந்த வரிசையில், தென்கொரிய கார் நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா-வும் அதன் கார்களுக்கு சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷனை வழங்க தயாராகி வருகின்றன. அதன்படி, இந்தியாவில் மக்கள் பலரால் வாங்கப்படும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களில் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன் புதியதாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஹூண்டாய் கிரெட்டா சிஎன்ஜி மற்றும் கியா செல்டோஸ் சிஎன்ஜி கார்கள் இந்தியாவில் சாலை ஒன்றில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், கியா செல்டோஸ் சிஎன்ஜி காரின் ரோடு டெஸ்ட்டிங் படங்களை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்துவிட்டோம். இந்த தொகுப்பில், ஹூண்டாய் கிரெட்டா சிஎன்ஜி காரை பற்றி பார்க்கலாம்.

hyundai creta cng road testing

கியா செல்டோஸ் சிஎன்ஜி காரை போன்று இந்த சோதனை ஓட்டத்தில் ஹூண்டாய் கிரெட்டா சிஎன்ஜி காரும் மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளது. புதிய கிரெட்டா சிஎன்ஜி காரின் தோற்றம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறு கார் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் முன் மற்றும் பின்பகுதிகள் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், காரின் முன்பக்க கிரில், டி.ஆர்.எல்-கள் மற்றும் ஹெட்லைட்களை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது. இந்த பாகங்கள் யாவும் தற்சமயம் விற்பனையில் இருக்கும் கிரெட்டா காரில் உள்ளதை போன்றே உள்ளன. இதனால், காரின் மெக்கானிக்கல் பாகங்களில் மட்டுமே மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். அப்படியென்றால், இந்த சோதனை கிரெட்டா கார் எதற்காக மறைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஒருவேளை, போட்டி கார் நிறுவனங்களை குழப்புவதற்காக இருக்கலாம்.

சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிரெட்டா காரில் புதியதாக 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியது. இதே டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஆனது கியா செல்டோஸிலும் வழங்கப்படுகிறது. கிரெட்டா சிஎன்ஜி மற்றும் செல்டோஸ் சிஎன்ஜி கார்களில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் தான் எரிவாயு சிலிண்டர்கள் உடன் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே, டர்போ என்ஜின் கார்களில் பவர் அவுட்-புட் ஆனது அதிகமாக கிடைக்கும். ஆனால், சிஎன்ஜி காரில் பொருத்தப்படுவதால், மேற்கூறப்பட்ட 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை குறைந்த இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக ஹூண்டாய் வழங்கும். இதன் மூலமாக, கிரெட்டா சிஎன்ஜி காரில் எரிபொருள் செலவானது குறைவாக இருக்கும்.

கிரெட்டா சிஎன்ஜி காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை ஹூண்டாய் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கிரெட்டா சிஎன்ஜி காரில் சிஎன்ஜி டேங்குகளை தனித்தனியாக இரண்டாக ஹூண்டாய் வழங்கும். இதன் மூலமாக, சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியில் நிறைய இடத்தை மிச்சப்படுத்தும் யுக்தியை முதலில் டாடா மோட்டார்ஸ் கொண்டுவந்தது.

இதே யுக்தியை பின்பற்றி, ஹூண்டாய் நிறுவனமும் அதன் சிஎன்ஜி கார்களில் ட்யூயல் சிஎன்ஜி டேங்க் செட்-அப்பை வழங்கும் என ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் கூறியிருந்தோம். இது நிஜமாகுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஹூண்டாய் கிரெட்டா சிஎன்ஜி காரின் அறிமுகத்தை 2025 மார்ச் மாதத்திற்கு பின் எதிர்பார்க்கலாம். கிரெட்டா காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில்தான் புதிய கிரெட்டா காரை அறிமுகம் செய்து இருந்தது. ஆதலால், இன்னும் சில மாதங்களுக்கு புதிய கிரெட்டா சிஎன்ஜி காரின் அறிமுகம் இருக்காது. 2025 மார்ச் மாதத்திற்கு பிறகே கிரெட்டா சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் முயற்சிக்கும். ஆனால், இப்போதே கிரெட்டா சிஎன்ஜி காரின் சோதனை ஓட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2024, 10:54 [IST]
English summary
Hyundai creta cng spotted while road testing check all details here
மேலும்... #hyundai creta #cng car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+