ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!

ஹூண்டாய் கிரெக்டா கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரெக்டா காரை தற்போது ராணுவ கேண்டேனில் ராணுவ வீரர்கள் வாங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக வெளிமார்க்கெட்டில் இருந்த காரை வாங்குவதைவிட ராணுவ கேண்டிலில் வாங்கினால் எவ்வளவு லாபம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் ராணுவ கேண்டின்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கார்களும் ராணுவ கேண்டீனில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா கார் ராணுவ கேண்டினில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

hyundai creta csd price

வெளிமார்க்கெட்டில் இந்த வாகனத்தை வாங்குவதைவிட ராணுவ மார்க்கெட்டில் இருந்த வாகனத்தை வாங்கினால் ரூபாய் 1.66 லட்சம் வரை மிச்சம் செய்ய முடியும் என தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இதன் படி எந்தெந்த வேரியன்ட்கள் எல்லாம் என்னென்ன விலை என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் கிரெட்டா காரை பொறுத்தவரை 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின் ஆப்ஷன்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு விதமான கியர் ஆப்ஷன்களும் உள்ளன. இதில் இந்த மூன்று இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்கள் கொண்ட கார்களும் ராணுவ கேண்டீனில் விற்பனையாகிறது. ஒரு சில வேரியண்ட்கள் மட்டும் விற்பனையில் இல்லை.

hyundai creta csd price

இதன்படி இந்த காரின் பேஸ் வேரியண்டான இவேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ10.99லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ9.92லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதை வாங்குவதன் மூலம் ரூ1.07லட்சம் மிச்சமாகிறது. இஎக்ஸ்வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ12.21லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ11.20லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதை வாங்குவதன் மூலம் ரூ1லட்சம் மிச்சம் ஆகிறது.

எஸ் வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் 13.42 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேண்டீனில் ரூ12.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. வித்தியாசம் ரூ1.12 லட்சம் ஆகும். எஸ்ஓ வேரியன்டை பொறுத்தவரை வெளிமார்க்கெட்டில் ரூ14.35 லட்சம் என்ற வெளியில் விற்பனையாகி வருகிறது.

hyundai creta csd price

ராணுவ கேண்டீனில் ரூ13.18 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. வித்தியாசம் 1.17 லட்சம் ஆகும்.எஸ்எக்ஸ் வேரியன்டை பொறுத்தவரை பொறுத்தவரை வெளிமாக்கெட்டில் எஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூ15.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ராணுவ கேனில் ரூ14.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. வித்தியாசம் ரூ1.17 லட்சம்.

அடுத்ததாக எஸ்எக்ஸ் டிடி, எஸ்எக்ஸ் டெக், எஸ்எக்ஸ்டெக் டிடி, எஸ்எக்ஸ்ஓ டிடி, ஆகிய 4 வேரியண்ட் கார்களும் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. அடுத்ததாக எஸ்எக்ஸ் ஓ வேரியன்டை பொருத்தவரை வெளிமாக்கெட்டில் ரூ 17.27 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது ராணுவ மார்க்கெட்டில் ரூ 15.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது வித்தியாசம் 1.32 லட்சம். இவையெல்லாம் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் காரின் வேரியண்டல் ஆகும்.

அடுத்ததாக 1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரின் வேரியன்டை பொறுத்த வரை எஸ்ஓ வேரியன்ட் வெளி மார்க்கெட்டில் ரூ15.85 லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ14.55 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. வித்தியாசம் ரூ1.29 லட்சம் ஆகும். எஸ்எக்ஸ் டெக் வேரியன்ட் வெளி மார்க்கெட்டில் ரூ17.48 லட்சம் என்ற விலையிலும்,

ராணுவ மார்க்கெட்டில் ரூ16.09 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. வித்தியாசம் ரூ1.43 லட்சம் ஆகும். எஸ்எக்ஸ் ஓ வேரியன்ட் வெளிமார்க்கெட்டில் ரூ18.73 லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ17.20 லட்சம் என்ற விலையிலும், விற்பனை ஆகிறது. வித்தியாசம் ரூ1.52 லட்சம் ஆகும் இதில் எஸ்எக்ஸ் டெக் டிடி மற்றும் எஸ்எக்ஸ் ஓ டிடி ஆகிய வேரியன்ட்கள் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் விற்பனையாகிறது. அதன்படி எஸ்எக்ஸ்ஓ வேரியன்ட் வெளி மார்க்கெட்டில் ரூ19.99 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூ18.33 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது. வித்தியாசம் ரூ1.66 லட்சம் ஆகும். இந்த இன்ஜின் உடன் கொண்டமற்ற வேரியன்ட்கள் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

1.5 லிட்டர் டீசல் மேனுவல் வேரியத்தை பொருத்தவரை இ வேரியன்ட் ரூ12.55 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ11.55 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1 லட்சம் ஆகும். இஎக்ஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூ13.78 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூபாய் ரூ12.62 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.15 லட்சம் ஆகும்.

எஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூ14.99 லட்சம் என்ற விலையில் வெளிமாக்கட்டிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ13.76 லட்சம் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. இதன் வித்தியாசம் ரூ 1.23 லட்சம் ஆகும். எஸ்எக்ஸ் டெக் வேரியன்டை பொறுத்தவரை ரூ17.55 லட்சம் என்ற விலையில் வெளிமாக்கட்டிலும், ரூ16.22 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகிறது.

இதன் வித்தியாசம் ரூ1.33 லட்சம் ஆகும். எஸ்எஸ்ஓ வேரியன்டை பொறுத்தவரை 18.84 லட்சம் என்ற விலையில் வெளி மார்கெட்டிலும், ரூ17.41 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனை ஆகிறது. இதன் வித்தியாசம் ரூபாய் 1.42 லட்சம் ஆகும். இதில் எஸ்ஓ,எஸ்எக்ஸ் டெக் டிடி, எஸ்எக்ஸ் ஓ டெக் டிடி ஆகிய வேரியன்டுகள் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

1.5 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்டை பொறுத்தவரை எஸ்எக்ஸ் ஓ என்ற ஒரே வேரியன்ட் மட்டுமே இராணுவ மார்க்கத்தில் விற்பனையில் இருக்கிறது. இந்த காரின் விலை ரூ19.99 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ18.36 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகிறது. இதன் வித்தியாசம் ரூ1.63 லட்சம் ஆகும் எஸ்ஓ மற்றும் எஸ்எக்ஸ் ஓ டிடி வேரியன்ட்கள்விற்பனையில் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யப்படும் கார்கள் எல்லாம் தகுதியுள்ள பதவியில் இருக்கும் ராணுவ வீரர்கள் மட்டுமே வாங்க முடியும். அதுவும் அவர்கள் கார் வாங்குவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. வெளி மார்கெட்டிலும், ராணுவ கேண்டீனிலும் இந்த விலை வித்தியாசம் வருவதற்கு ஜிஎஸ்டி வரி தான் காரணம். ராணுவ கேண்டீனில் ஜிஎஸ்டி வரி கிடையாது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 7:00 [IST]
English summary
Hyundai creta csd price ex showroom comparison details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X