கிரெட்டா சிவிடி-க்கும், எலிவேட் சிவிடி-க்கும் மைலேஜ் டெஸ்ட் வச்சா எது ஜெயிக்கும்?.. இதோ ஓர் முழு அலசல்!
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவிக்கான போட்டி கார் மாடல் என ஹோண்ட எலிவேட் (Honda Elevate) எஸ்யூவி கருதப்படுகின்றது. மேலும், ஹோண்டா எலிவேட்-க்கும் மிக பெரிய பகையாலியாக கிரெட்டா இருந்து வருகின்றது. இந்த இரண்டு கார் மாடல்களும் என்ன மாதிரியான மைலேஜ் திறனை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் நாம் ஒப்பீடு செய்து பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, இரு கார் மாடல்களின் சிவிடி (Continuously Variable Transmission) கியர்பாக்ஸ் ஆப்ஷனையே ஒப்பீடு செய்து பார்க்க இருக்கின்றோம்.
அராய் (ARAI) அமைப்பு வழங்கிய சான்றின்படி ஹூண்டாய் கிரெட்டா சிவிடி, ஒரு லிட்டருக்கு 17.7 கி.,மீட்டரும், ஹோண்டா எலிவேட் சிவிடி ஒரு லிட்டருக்கு 16.92 கி.,மீட்டரும் மைலேஜ் தரும் என தெரிகின்றது. ஆனால், நாம் இந்த பதிவில் நிஜ உலகில் இந்த கார் மாடல்கள் என்ன மாதிரியான மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையேக் காண உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் கிரெட்டா சிவிடி மைலேஜ் விபரம்: 1.5 லிட்டர், 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் - சிவிடி கியரைக் கொண்ட ஹூண்டாய் கிரெட்டாவே மைலேஜ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது. இந்த கார் மாடல் அராய் வழங்கிய சான்றின்படி 17.7 கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்பட்டு இருக்கின்றது.
ஆனால், ரியல் உலகில் சிவிடி கியர்பாக்ஸைக் கொண்ட கிரெட்டா அதிகபட்சமாகவே 13.8 கிமீ மைலேஜை மட்டுமே தந்திருக்கின்றது. நெடுஞ்சாலையில் அந்த கார் வழங்கிய மைலேஜ் திறன் இது ஆகும். அதேவேளையில், நகரத்தில் மட்டுமே இந்த காரை ஓட்டி வந்தால் 10.3 கிமீட்டர் வரை மட்டுமே ஒரு லிட்டருக்கு அது மைலேஜ் தரும். மேலும், நெடுஞ்சாலை மற்றும் சிட்டி என இரண்டிலும் மாறி மாறி இந்த வாகனம் இயங்க நேரிட்டால் சுமார் 12.05 கிமீ வரையில் மைலேஜ் கிடைக்கும்.

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒரு டீசல் எஞ்சின் தேர்வும், இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள்தான் அவை. 1.5லிட்டர் பெட்ரோல், 1.5லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5லிட்டர் டீசல் ஆகிய ஆப்ஷன்களே கிரெட்டாவில் வழங்கப்படுகின்றன.
ஹோண்டா எலிவேட் சிவிடி மைலேஜ் விபரம்: 1.5 லிட்டர் 4 சிலிண்டர், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் - சிவிடி வசதிக் கொண்ட எலிவேட் கார் அதிகபட்சமாக நிஜ உலகில் 13.1 கிமீ மைலேஜை ஒரு லிட்டருக்கு வழங்கி இருக்கின்றது. இது நெடுஞ்சாலையில் அந்த கார் வழங்கிய மைலேஜ் ஆகும்.
இதே கார் சிட்டிக்குள் வைத்து இயக்கியபோது 8.6 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கி இருக்கின்றது. அதேநேரத்தில் இரண்டிலும் கலவையாக ஓட்டி பார்த்தபோது அதிகபட்சமாக 10.85 கிமீ வரையில் எலிவேட் மைலேஜை தந்திருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் அனைத்திலும் கிரெட்டா சிவிடியே அதிகம் மைலேஜ் தருவது தெரிய வந்துள்ளது.
எனவே மைலேஜ் தருவதிலும் கிரெட்டாவே மிக சிறந்த கார் மாடலாக உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா சிவிடி இந்தியாவில் ரூ. 15.86 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், எலிவேட் சிவிடியோ ரூ. 13.71 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலரின் பிரியமான எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இதற்கு இதன் விலை எலிவேட்டைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அதில் உள்ள பிரீமியம் அம்சங்கள் மற்றும் அதன் அதிக மைலேஜ் தரும் திறன் ஆகியவை இந்த கார் மாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ச்சியாக இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








