ஹூண்டாய் இந்த கார ஓசில கொடுக்குதா என்ன!.. பெட்டி கடை பொருட்களை போல விற்பனையாகிட்டு இருக்கு..
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் கிரெட்டா-வும் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அது இப்போது அடைத்திருக்கும் விற்பனை வளர்ச்சியானது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தைக் ஏற்டுத்தக் கூடியதாக அமைந்திருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா இதுவரை 1.1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த கார் மாடல் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட அந்த ஆண்டிலேயே அது சுமார் 40,952 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. இது மாதத்திற்கு 5,850 யூனிட்டுகள் ஆகும். இதற்கு பின்னர்தான் கிரெட்டாவின் விற்பனை மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டில் 92,926 யூனிட்டுகளும், 2017 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,05,484 யூனிட்டுகளும் விற்பனையாகின.

இதைவிட மிக அதிக விற்பனையாக 2018 ஆம் ஆண்டில் 1,20,905 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. ஆனால், இதற்கு அடுத்தபடியாக வந்த இரண்டு ஆண்டுகளும் கிரெட்டாவிற்கு சற்றே மோசமான ஆண்டுகளாகவே அமைந்தன. 2019 ஆம் ஆண்டில் 99,736 யூனிட்டகளாக இதன் விற்பனைச் சரிந்தது.
தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டிலும் இதன் விற்பனைச் சரிந்து 96,989 யூனிட்டுகளாக மாறின. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த அளவு மாபெரும் சரிவை அது சந்தித்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு பின்னர் வந்த ஆண்டுகள் அனைத்திலும் இந்த கார் மாடல் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், 2021 ஆம் ஆண்டில் 1,25,437 யூனிட்டுகளும், 2022 ஆம் ஆண்டில் 1,40,895 யூனிட்டுகளும் மற்றும் 2023 ஆம் ஆண்டில் 1,57,311 யூனிட்டுகளும் கிரெட்டா கார் மாடல் விற்பனையாகியது. தொடர்ந்து, நடப்பாண்டு முடிவடைய இன்னும் பல வாரங்கள் இருக்கின்ற நிலையில் இப்போதே கிரெட்டா 1,41,362 பேர் வாங்கிவிட்டனர்.
ஆகையால், எந்த ஆண்டிலும் இல்லாத அளவில் மாபெரும் விற்பனை வளர்ச்சியை கிரெட்டா காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2024 செப்டம்பர் வரையில் 11,06,095 யூனிட்டுகள் வரை கிரெட்டா விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக, ஹூண்டாய் கிரெட்டா கார் 1 மல்லியனையும் கடந்து நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், மிக மிக அமோகமான வரவேற்பு கிரெட்டாவிற்கு கிடைத்துக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே அதன் விற்பனை புள்ளி விபரம் தற்போது அமைந்திருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக அப்கிரேட் செய்து வருகின்றது. அந்தவகையில், 2015 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் தலைமுறை கிரெட்டா சென்ற 2020 ஆம் ஆண்டில் மார்ச் 16 ஆம் தேதி விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இப்போது விற்பனையில் இருப்பது இந்த இரண்டாம் தலைமுறையின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். இது ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. தொடர்ந்து இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு எலெக்ட்ரிக் வெர்ஷனையும் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ஹோண்டாய் கிரெட்டா களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல்வேறு வளர்ச்சியை கிரெட்டா எஸ்யூவி கார் மாடல் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவும் தற்போது அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பற்றிய புள்ளி விபரங்கள் பற்றிய தகவல் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த காருக்கு சில பிரபலங்களஅ மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








