டாடா கார் எல்லாம் ஓரம் போக வேண்டியதுதான்... பிளான் போட்டு ஹூண்டாய் உருவாக்கும் புது எலக்ட்ரிக் கார்!!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய கார்கள் மார்க்கெட்டில் தற்சமயம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்று கிரெட்டா இவி (Creta EV) ஆகும். விற்பனையில் இருக்கும் கிரெட்டா எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனாக கிரெட்டா இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. வருகிற 2025 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதனை விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல, மெல்ல விரிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், டாடா மோட்டார்ஸ் ஆகும். மற்ற சில கார் நிறுவனங்களும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கின்றன என்றாலும், டாடா மோட்டார்ஸ் தான் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் கோனா இவி, ஐயோனிக் 5 போன்ற எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது. ஆனால், அவற்றின் அதிகப்படியான விலையினால் கோனா இவி மற்றும் ஐயோனிக் 5 அதிக எண்ணிக்கையில் விற்பனையாகவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹூண்டாய் கோனா இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை இந்தியாவில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஹூண்டாய் நிறுவனம் அதன் கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக, ஹூண்டாயில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட இரு எலக்ட்ரிக் கார்கள் பெரியதாக வெற்றித்தராவிடினும் கிரெட்டா இவி மார்க்கெட்டில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, ஹூண்டாய் கிரெட்டா ஆகும்.

2025 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார் ஆனது கிரெட்டாவின் கே2 பிளாட்ஃபாரத்தின் மாடிஃபை செய்யப்பட்ட வெர்சனில் உருவாக்கப்படுகிறது. அதாவது, கிரெட்டாவை வடிவமைப்பதற்கு கே2 என்கிற பிளாட்ஃபாரத்தை ஹூண்டாய் பயன்படுத்துகிறது. இந்த கே2 பிளாட்ஃபாரத்தில் சிறு, சிறு மாற்றங்களை செய்து, அதனை கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரை வடிவமைக்க ஹூண்டாய் பயன்படுத்துவதாக தற்போது நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக, கிரெட்டா இவி காரை உருவாக்குவதற்கு முற்றிலும் புத்தம் புதிய பிளாட்ஃபாரம் அல்லது கோனா இவி எலக்ட்ரிக் காரின் பிளாட்ஃபாரத்தை ஹூண்டாய் பயன்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெற்றி பெற்ற கிரெட்டாவின் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஆனது ஹூண்டாய் நிறுவனத்திற்கு பல்வேறு விதங்களில் நன்மை தரும்.
கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட உள்ள எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி பேக் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், கிரெட்டா இவி காரை இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ஹூண்டாய் அறிமுகம் செய்யலாம். அவற்றின் ரேஞ்ச் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவு வரையில் இருக்கலாம்.
ஹூண்டாய் கிரெட்டா இவி காருக்கு டாடா மோட்டார்ஸின் புத்தம் புதிய எலக்ட்ரிக் காரான கர்வ் இவி போட்டியாக இருக்கும். கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் 45kWh மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில், 45kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 502கிமீ தொலைவிற்கும், 55kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 585கிமீ தொலைவிற்கும் காரை இயக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் தோல்வியடைந்த ஹூண்டாய் கோனா இவி காரின் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தி உருவாக்குவதை காட்டிலும், கிரெட்டாவின் கே2 பிளாட்ஃபாரத்தை பயன்படுத்துவது சரியான முடிவாகும். இதன் மூலமாக, கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்யும் செலவு ஹூண்டாய் நிறுவனத்திற்கு குறையும். ஏனெனில், கிரெட்டாவில் வழங்கப்படும் நிறைய அம்சங்களை அப்படியே கிரெட்டா இவி காரில் வழங்க முடியும்.
Source: Carwale


Click it and Unblock the Notifications








