ஹூண்டாய் களமிறக்க போகும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! மாருதிக்கு ஆரம்பத்துலயே 'செக்' வெச்சுட்டாங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனானது, ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்தாண்டு (2025) ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக நடப்பாண்டு இறுதியிலேயே ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த முக்கியமான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், ட்வின் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளையும் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

அதே நேரத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 கிலோ மீட்டர்கள் என்பது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range)-ஆக இருக்கும்.
டிசைனை பொறுத்தவரையில், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், ஒருங்கிணைந்த ஸ்டாப் லேம்ப் உடன் கூடிய பின் பக்க ஸ்பாய்லர், அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான அம்சங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) எலெக்ட்ரிக் காருடன், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இவிஎக்ஸ்தான், இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுவும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








