இந்தியாவே தவம் கெடக்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! டாடாவுக்கு ஆப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் மூலம், ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

2024 Hyundai Creta

இந்த வரிசையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய ஒரு சில புதிய தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இதன்படி ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், புதிய அலாய் வீல் டிசைன் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் மாடலிடம் இருந்து இது வேறுபடும் வகையில் இருக்கலாம்.

அதேபோல் முன் பகுதியிலும், புதிய பம்பர் உள்ளிட்ட மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் டெயில்லைட்கள் உள்பட பின்புற டிசைனானது, ஐசி இன்ஜின் மாடலை போலவேதான் இருக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில் உட்புற டிசைனானது, பெரும்பாலும் ஐசி இன்ஜின் மாடலை போலவேதான் இருக்கும்.

Hyundai Creta

ஆனால் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். எனினும் வசதிகளின் பட்டியல் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் இதன் பேட்டரி (Battery) மற்றும் ரேஞ்ச் (Range) போன்ற தகவல்கள் எதையும் ஹூண்டாய் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரில், 55-60kWh திறனுடைய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் டிரைவிங் ரேஞ்ச் 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இதை தொடர்ந்து 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அப்போதுதான் இதன் விலை (Price) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனினும் இதன் ஆரம்ப விலை சுமார் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், ஹூண்டாய் க்ரெட்டா இவி போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 23:58 [IST]
English summary
Hyundai creta ev new details out check here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+