டாடா, மாருதி எல்லாம் தலையில துண்டை போட வேண்டியதுதான்! ஹூண்டாய் 23ம் தேதி சைலெண்டா இதை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தனி பிரத்தியேக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு லைனை உருவாக்கி வரும் நிலையில், அதில் முதல் காராக கிரெக்டா இவி கார் தயாரிக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் ஹுண்டாய் மோட்டார் குரூப் நிறுவனத்தின் செயல் சேர்மன் யூஸ் சங் என்பவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார் . இவர் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுப்பதற்காக இந்தியா வந்து பல்வேறு முக்கிய அதிகாரிகளை சந்தித்து கூட்டம் நடத்தினார். இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி இந்நிறுவனத்தின் டவுன்ஹால் மீட்டிங் நடத்தப்பட்டது.

அதில் ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரு பிராண்டின் கீழ் பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் முக்கியமாக இந்தியாவில் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் புரொடக்ஷன் லைனை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்காக இதை உருவாக்குவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 2024 ம் ஆண்டு இறுதியிலேயே இந்த புரொடக்ஷன் லைன் உருவாக்கப்பட்டு அதில் முதல் கார் தயாரிக்கப்பட்டு விடும் என்ற அறிவிப்பும் நமக்கு கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் 2025-ம் ஆண்டு இந்த கிரெட்டா இவி கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஹூண்டாய் நிறுவனமும் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்தால் முதல் காராக தனது கிரெக்டா காரை எலெக்ட்ரிக் வெர்ஷனிற்கு மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிரெக்டா எலக்ட்ரிக் கார் தான் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் சோதனைக்காக உருவாக்கப்பட்ட கார் தான் தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட கார் இல்லை.
இந்த காரின் சோதனை வெற்றிகரமாக நடக்கும் நிலையில் இந்தியாவிலேயே தயாரிப்பு லைன் அமைத்து அங்கு கிரெக்டா இவி காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் என கிரெக்டா காரை போல தான் கரெக்டா இவி காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெக்டா இவி காரை பொறுத்தவரை 45 கிலோ வாட் ஹவர் பேட்டரிபேக் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் போட்டி நிறுவனங்களின் காரான எம்ஜி இசட் எஸ் இவி மற்றும் மாருதி இவிஎக்ஸ் ஆகிய கார்களின் பேட்டரியை விட குறைந்த பேட்டரியாக இருக்கிறது. எம்ஜி இசட் எஸ் இவியில் 50.3 கிலோ வாட் ஹவர் பேட்டரியும், மாருதி சுசுகி இவிஎக்ஸ் காரில் 48 கிலோ வாட் ஹவர் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா இவி காரில் உள்ள மோட்டாரை பொருத்தவரை கோனா எலெக்ட்ரிக் காரின் என்ட்ரி லெவல் வெர்ஷனில் உள்ள அதே மோட்டார் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் மோட்டார் செட்டப்புடன் முன்பக்க வீல் டிரைவ் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவிலேயே இந்த காரை தயாரிப்பதற்கான புரொடக்ஷன் லைனை உருவாக்கி ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கு என பிரத்தியேகமான எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கி விட்டால் நிச்சயம் எலெக்ட்ரிக் கார் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றே சொல்லலாம். தற்போது எலெக்ட்ரிக் கார் உலகில் டாடா நிறுவனம் தான் கோலோச்சி வருகிறது. அதற்கு ஹூண்டாய் நிறுவனம் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே ஹுண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்தால் நிச்சயம் குறைந்த விலையில் தான் அதை விற்பனைக்கு கொண்டு வரும். ஹூண்டாய் கார்கள் மீது ஏற்கனவே மக்களுக்கு நம்பிக்கை இருக்கும் நிலையில் இந்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் மார்க்கெட்டிலும் நல்ல போட்டி உருவாகும்.


Click it and Unblock the Notifications








