மலிவான ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் இவ்வளவு கம்மியான விலையில் வர போகுதா! டெஸ்ட்டிங் வேலை எல்லாம் வேகமா நடக்குது!

மற்ற வெளிநாடுகளை போல, நம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் தீவிரமாக இருக்கும் நிறுவனம் என்று பார்த்தால், அது டாடா மோட்டார்ஸ் மட்டும்தான். மஹிந்திரா இப்போதுதான் எலக்ட்ரிக் கார்களை நோக்கிய தனது பயணத்தை துவங்கியுள்ளது. அடுத்ததாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் கிரெட்டா இவி என்கிற எலக்ட்ரிக் காரை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், புதிய கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா இவி மற்றும் ஐயோனிக் 5 என இரண்டு எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இதில், கோனா இவி ஆனது கிட்டத்தட்ட கடந்த 5 வருடங்களாக நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ளது. இருப்பினும், ஹூண்டாயில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படும் விஷயமே நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.

hyundai creta ev spotted

இதற்கு முக்கிய காரணம், ஹூண்டாய் கோனா இவி மற்றும் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான விலையாகும். இதன் விளைவாக, ஹூண்டாய் கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரின் மீது நம் இந்திய மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள மிக முக்கியமான எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக கிரெட்டா இவி பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை போன்று ஹூண்டாய் கிரெட்டா இவி காரையும் மக்கள் நிறைய பேர் வாங்குவார்கள் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹூண்டாய் கிரெட்டா இவி கார் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில், காரின் தோற்றம் யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்பதற்காக, கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில், இந்த கிரெட்டா இவி கார் புனேவில் சார்ஜிங் நிலையத்தில் சார்ஜ் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில், காரின் தோற்றம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருப்பதால், காரின் சக்கரங்களை தவிர்த்து வேறெதுவும் தெரியவில்லை. கிரெட்டா இவி காரின் சக்கரங்களின் டிசைன் ஏற்கனவே நமக்கு தெரிந்ததே.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தை சற்று உற்று கவனித்தால், காரின் பக்கவாட்டில் முன் ஜன்னலுக்கு மேலே சென்சார் உடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை காணலாம். இத்தகைய கேமராக்கள், காரில் 360-டிகிரி கேமரா செட்-அப்பிற்காக வழங்கப்படுகின்றன. இந்த கேமராக்களின் உதவியுடன் நிறைய விஷயங்களை காரில் பெற முடியும். அதில் ஒன்று, பிளைண்ட்-ஸ்பாட் மானிடரிங் ஆகும்.

அதாவது, காருக்குள் இருந்து ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை திரை வழியாக ஓட்டுனர் பார்ப்பதற்கு உதவும் அம்சம் பிளைண்ட்-ஸ்பாட் மானிடரிங் ஆகும். மேலும், கிரெட்டா இவி காரில் அடாஸ் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதை சென்சார் உடன் கூடிய இந்த கேமரா செட்-அப் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஹூண்டாய் கிரெட்டா காரில் லெவல்-2 அடாஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்றப்படி, புதிய கிரெட்டா இவி எலக்ட்ரிக் காரின் டிசைன் இப்போது வரையில் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கிரெட்டா எலக்ட்ரிக் காரில் 50- 60kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படலாம். இரட்டை மோட்டார் செட்-அப் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. சிங்கிள்-மோட்டார் செட்-அப் கொடுக்கப்படலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் கிரெட்டா இவி காரை அதிகப்பட்சமாக ஏறக்குறைய 500கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லும் வகையில் ஹூண்டாய் வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஹூண்டாய் கிரெட்டா ஆகும். ஆதலால், கிரெட்டா இவி இந்திய மார்க்கெட்டில் பெரிய வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இருப்பினும், ஹூண்டாய் கார்கள் என்றாலே கொஞ்சம் விலைமிக்கவை என்பதால், கிரெட்டா இவி ரூ.20 இலட்சத்திற்கு கீழ் விலையை பெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுக தேதி இன்னும் தெரியவில்லை.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 19:02 [IST]
English summary
Hyundai creta ev spotted while charging in pune check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+