நினைச்சு பாக்காத நேரத்தில் அறிமுகமாக போகுது.. புதுசா முளைத்த காளான் எம்ஜி-க்கு கெட்ட நேரம் ஆரம்பிக்க போகுது!

இந்தியாவில் மின்சார கார் (Electric Car)-களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விரைவிலேயே ஓர் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. கிரெட்டாவின் மின்சார (Creta EV) வெர்ஷன்தான் அது ஆகும். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கிரெட்டா இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்த மாடலின் மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 (Ioniq 5) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. முன்னதாக இந்த நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த மின்சார கார் தற்போது விற்பனையில் இல்லை.

Hyundai creta ev launching in january 2025

சொல்லப்போனால் அனைத்து தரப்பு மக்களும் வாங்கக் கூடிய வகையில் ஒரு எலெக்ட்ரிக் காரைகூட ஹூண்டாய் விற்பனைக்கு வழங்கவில்லை. ஐயோனிக் 5, மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர வகை மின்சார கார் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டே இந்தியாவில் ரூ. 46.5 லட்சம் ஆகும்.

இந்த நிலையிலேயே, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் விதமாக கிரெட்டா இவி-யை ஹூண்டாய் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு சற்றே குறைவான விலையே நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ரூ. 12 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இந்த மின்சார விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதன் விலைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த காரின் அறிமுகமானது வருகின்ற ஜனவரி மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஹூண்டாய் மின்சார காரின் வருகைக்காக காத்திருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்து இருக்கின்றது.

முக்கியமாக இந்த காரில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றது? இதன் விலை எவ்வளவாக இருக்கும்? மற்றும் இது ஓர் முழு சார்ஜில் எவ்வளவு ரேஞ்ச் தரும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த அனைத்து எதிர்பார்ப்புகளுக்குமான பதில் விரைவிலேயே கிடைக்கும் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.

அதாவது, ஜனவரி மாத அறிமுகத்தின்போது கிரெட்டா இவி பற்றிய பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் கிரெட்டா இவி-யின் ஜனவரி அறிமுகத்தை நிறுவனத்தின் மூத்த அதிகாரியான தருண் கர்க்-கே உறுதிப்படுத்தி இருக்கின்றார். சமீபத்தில் நிறுவனத்தின் முதலீட்டாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போதே 2025 ஜனவரியில் கிரெட்டா இவி அறிமுகமாக இருக்கும் தகவலை பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து, கிரெட்டா இவி பார்ப்பதற்கு கிரெட்டா ஐசிஇ-யை போலவே இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், இது மின்சார வெர்ஷன் என்பதால் சற்றே மாறுபட்ட அம்சங்களைத் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், மாறுபட்ட கிரில், லோகோ மற்றும் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை அது தாங்கியிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், பெரிய பெரிய திரைகளையும் ஹூண்டாய் கிரெட்டா இவி எலெக்ட்ரிக் மாடல் இருப்பதும் இந்த கார்குறித்து வெளியாகிய ஸ்பை படங்களின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

10.25 அங்குல தொடுதிரை, 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவின் புதிய தலைவனாக எம்ஜி நிறுவனம் மாறி வருகின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா மோட்டார்ஸ் ஆக்கிரமித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. அதன் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் இவியை, விண்ட்ஸர் இவி விற்பனையில் வீழ்த்தத் தொடங்கி இருக்கின்றது. இந்த கார்களுக்கே கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விதமாக ஹூண்டாய் கிரெட்டா இவி விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 21, 2024, 20:44 [IST]
English summary
Hyundai creta ev to be launched in india by january 2025 with affordable pricing
மேலும்... #hyundai #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+