டாடாவை பதம் பார்க்க போகும் ஹூண்டாய்.. இந்தியர்களின் மனசை கலைப்பதற்கான அனைத்து வேலையும் தயார் போலையே!
இப்போதைய நிலவரப்படி இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) இருக்கின்றது. இந்தியாவின் நம்பர் 1 செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலும் இதுவே ஆகும். இத்தகைய கார் மாடலுக்கே ஆப்பு வைப்பதற்கான வேலையில் ஹூண்டாய் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹூண்டாய் நிறுவனம் அதன் புகழ் பெற்ற கிரெட்டா கார் வாயிலாகவே இந்தியர்கள் பலரை வளைத்துப் போட திட்டமிட்டுள்ளது.
இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக கிரெட்டா இவி இருக்கின்றது. இதையே அது விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது ஹூண்டாய் நிறுவனம். இந்த நிலையிலேயே ஜனவரி 2025 ஆம் ஆண்டிற்கு ஹூண்டாய் கிரெட்டா இவி விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்திய தகவல்களின்படி, ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான தருண் கர்க்-ம் இந்த கார் 2025 ஜனவரிக்குள் அறிமுகமாகிவிடும் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆகையால், டாடா நெக்ஸான் இவிக்கான மிக சிறந்த போட்டியாளன் இன்னும் ஆறு மாதங்களில் இந்தியாவில் கால் தடம் பதித்துவிடும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்த காரின் சோதனையோட்ட பணிகளை தொடங்கிவிட்டது. இதுதவிர இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் உற்பத்தி பணிகளையும் அது தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்தின் மூத்த அதிகாரி இந்த தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நெக்ஸான் இவிக்கு மட்டுமல்ல விரைவில் சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கும் போட்டியாக இருக்கும். மேலும், எம்ஜி இசட்எஸ் இவி போன்ற எலெக்ட்ரிக் கார் மாடலுக்கும் இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது.
இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்திய மின்சார கார் பிரிவை அலங்கரிக்கும் நோக்கில் ஹூண்டாய் தன்னுடைய அதிகம் விற்பனையாகும் கிரெட்டா கார் மாடலில் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில், ஹூண்டாய் ஏற்கனவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கோனா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அம்சங்களே வழங்கப்பட இருக்கின்றது. அதாவது, கோனா எலெக்ட்ரிக் காரில் 138 எச்பி மற்றும் 255 என்எம் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும், 45 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதே அம்சங்களே கிரெட்டா இவியிலும் வழங்கப்பட இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் சுமார் 400 கிமீ ரேஞ்ஜை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதன் துள்ளியமான ரேஞ்ஜ் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போது விற்பனையில் இருக்கும் கோனா எலெக்ட்ரிக் 452 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் விலை ரூ. 25.30 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கிரெட்டா இவி இதைவிட சற்று குறைவான விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 20 லட்சம் இதற்கு விலை நிர்யணம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த காரின் இடத்தை பிடிக்கும் முயற்சியிலேயே போட்டி நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரையும், ஹூண்டாய் கிரெட்டா இவியையும் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








