ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்களா? ஹூண்டாய்க்கு அடித்த ஜாக்பாட்!

ஹூண்டாய் கிரெக்டா காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது இந்த காரை 51,000 பேர் புக் செய்துள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த காருக்காக நீண்ட ஆண்டுகளாக பலர் காத்திருந்த நிலையில் தற்போது புக்கிங் குவிந்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் சிறந்த எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஹுண்டாய் நிறுவனம் இந்த கிரெக்டா காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு அம்சங்கள் மற்றும் இதன் டிசைன் உள்ளிட்ட ஏகப்பட்ட அப்டேட்கள் இடம் பெற்றிருந்தன.

hyundai creta facelift booking

ஹூண்டாய் ரசிகர்கள் பலர் இந்த கிரெக்டா காரின் அப்டேட்டிற்காக நீண்ட ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தான் இதை அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தி அதற்கான புக்கிங்கையும் துவங்கியது. கிட்டத்தட்ட புக்கிங் துவங்கப்பட்டு ஒரு மாத காலமான நிலையில் இந்த காரை இதுவரை 51 ஆயிரம் பேர் புக் செய்துள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹுண்டாய் கிரெட்டா காரை பொறுத்தவரை ரூபாய் 10.99 லட்சம் முதல் ரூபாய் 19.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இது வெறும் அறிமுக கால விலை தான். இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகு இதன் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தின் போது புக் செய்தவர்களுக்கு மட்டுமே அறிமுக விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

hyundai creta facelift booking

2ம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் 2020-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் மிகப்பெரிய அப்டேட்டுக்குப் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் செய்யப்பட்டுள்ளதால் இதன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு இதற்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில் ஹுண்டாய் நிறுவனம் இதன் வெளிப்புறத் தோற்றத்தை முற்றிலுமாக மறுவடிவமைப்பு செய்துள்ளது என்றே சொல்லலாம்.

என்னதான் பழைய காரின் லுக் இருந்தாலும் பல அம்சங்கள் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. உட்புறமும் கவனிக்கத்தக்க வகையில் பல்வேறு மாற்றங்கள் அப்டேட் செய்யப்பட்டு பிரீமியம் அம்சங்கள் உட்பகுத்தப்பட்டுள்ளன. பழைய காரை விட புதிய காரின் உள்ள உட்புற கட்டமைப்பு சற்று பிரீமியம் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள் அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டு தற்போது உள்ள டிரெண்டிற்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டுள்ளது.

hyundai creta facelift booking

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 பிஎஸ் பவரையும் 283 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா காரின் வேரியண்ட் விவரங்களை பொருத்தவரை இ, இஎக்ஸ், எஸ், எஸ்ஓ, எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்டெக் மற்றும் எஸ்எக்ஸ்ஒ ஆகிய வேரியான்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை 6 சிங்கிள் டோன் கலர் ஆப்ஷனும் ஒரு டூயல் டோன் கலர் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த காரின் தொழில்நுட்ப அம்சமாக லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம்சம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 19 அசிஸ்டிவ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் கொண்ட இரண்டு டிஸ்ப்ளே இருக்கிறது ஒரு டிஸ்ப்ளே டச் ஸ்கிரீன் இன்போடைமெண்ட் சிஸ்டமாகவும் மற்றொரு டிஸ்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டராகவும் பயன்படுகிறது. இதுபோக 6 ஏர் பேக்குகள், வாய்ஸ் எனேபில்டு சன்ரூஃப், பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், முன்பக்க வெண்டிலேட்டட் சீட்டுகள். டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம். டிக்கெட் ஸ்டேரிங் வீல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஹூண்டாய் கரெக்டா கார் மார்க்கெட்டில் உள்ள சிறப்பாக விற்பனையாகும் கார் செக்மெண்டில் அறிமுகமாகியுள்ள காராகும். இந்த காருக்கு போட்டியாக மார்க்கெட்டில் ஏகப்பட்ட வாகனங்கள் உள்ளன. இருந்தாலும் மார்க்கெட்டில் நல்ல பெயர் இருப்பதால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இதனால் தான் இதற்கு புக்கிங் குவிந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 18:26 [IST]
English summary
Hyundai creta facelift booking over 51000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X