இந்தியாவே தவம் கிடக்கும் காரின் விலை இவ்ளோதானா! கலக்கத்தில் மாருதி... இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஸன்மா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் இந்திய சந்தையில் நாளை (ஜனவரி 16) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, அப்டேட் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Hyundai Creta Front Design

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 7 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை இ (E), இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ் (ஓ) S(O), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) SX(O) ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் (Colour Options), இந்த கார் விற்பனை செய்யப்படும். அவை ரோபஸ்ட் எமரால்ட் பியர்ல் (புதியது), ஃபயரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் க்ரே மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடன் கூடிய அட்லஸ் ஒயிட் ஆகியவை ஆகும்.

Hyundai Creta

வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) முக்கியமான ஒன்றாகும். இதுதவிர 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகளும் முக்கியமான ஒரு வசதிதான். இதில் ஒன்று, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.

இவை எல்லாம் தவிர, மல்டி-ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவை ஆகும். கியர் பாக்ஸை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர், சிவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி உள்ளிட்ட ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 11 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வ விலை நாளைதான் அறிவிக்கப்படும்.

இந்த புதிய மாடலின் வருகை, கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் ஹோண்டா எலவேட் (Honda Elevate) போன்ற கார்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 15, 2024, 17:26 [IST]
English summary
Hyundai creta facelift launch tomorrow expected price engine variants features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+