காரை இப்போதே புக் செய்து வைங்க!! ஷோரூம்களுக்கு 2024 க்ரெட்டா கார் வந்தாச்சு... புதுசா இத்தனை அப்டேட்களா?

2024 ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார்கள் டீலர்ஷிப் ஷோரூம் மையங்களுக்கு வர ஆரம்பித்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போதைக்கு விற்பனை சரிவை கண்டுவரும் ஒரே எஸ்யூவி கார் ஹூண்டாய் க்ரெட்டா ஆகும். இதனை கடந்த 2023 டிசம்பர் மாத விற்பனை ரிப்போர்ட்டில் கூட புள்ளி விபரங்களுடன் சமீபத்தில் தெளிவாக பார்த்திருந்தோம். இதன் காரணமாகவே, ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதன் பிரபலமான காரான க்ரெட்டாவை அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

hyundai creta facelift started arriving

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் 2024 க்ரெட்டா கார் வருகிற ஜனவரி 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், புதிய க்ரெட்டா காருக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன.

ஹூண்டாயின் க்ளோபல் டிசைன் மொழியான 'சென்சுஅஸ் ஸ்போர்டினஸ்'-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 2024 க்ரெட்டா கார் கம்பீரமான தோற்றத்தை பெற்று உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனை, டீலர்ஷிப் வளாகம் ஒன்றில் இருந்து தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் காண முடிகிறது.

hyundai creta facelift started arriving

ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், காரில் முக்கியமான மாற்றங்கள் யாவும் முன்பக்கத்தில்தான் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதன்படி, H-வடிவ விளக்குகள், சதுர வடிவில் ஹெட்லேம்ப்கள், பின்பக்கத்தில் டெயில்லைட்கள் இரண்டையும் இணைக்கும் வகையில் கனெக்டட் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவற்றை படங்களில் 2024 க்ரெட்டாவில் காண முடிகிறது.

புதிய எல்இடி ஹெட்லைட்களுக்கு ஏற்ப முன்பக்க பாராமெட்ரிக் க்ரில் மற்றும் பம்பரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பின்பக்கத்திலும் பம்பரின் டிசைன் மாற்றப்பட்டு இருப்பது மட்டுமின்றி, பின் கதவின் வடிவத்திலும் ஹூண்டாய் வேலை செய்துள்ளது. அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. டைமண்ட்-கட் டிசைனில் ட்யூயல்-டோனில் 2024 க்ரெட்டாவின் அலாய் சக்கரங்கள் உள்ளன.

hyundai creta facelift started arriving

புதிய க்ரெட்டாவில் மற்றொரு அசத்தலான அம்சமாக மடக்கக்கூடிய படிக்கட்டு பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்காகவும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் புதிய க்ரெட்டாவின் உட்பக்கத்தை காண முடியவில்லை என்றாலும், அட்வான்ஸான மாடர்ன் தரத்திலான தோற்றத்தில் 2024 க்ரெட்டா காரின் உட்பக்க கேபினை எதிர்பார்க்கிறோம்.

முக்கியமாக, பயணிகளின் சவுகரியத்துக்காக காரின் கேபினில் அதிக இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பது உறுதி. தொழிற்நுட்ப வசதிகளை பொறுத்தவரையில், லெவல்-2 அடாஸ், சரவுண்ட் வியூ மானிடர், ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிடர், ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல், குரலுக்கு கட்டுப்படக்கூடிய ஸ்மார்ட் பனோராமிக் சன்ரூஃப், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவற்றை 2024 க்ரெட்டாவில் எதிர்பார்க்கிறோம்.

hyundai creta facelift started arriving

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 2024 க்ரெட்டாவின் தோற்றத்தையும், தொழிற்நுட்ப வசதிகளையும் தற்போதைய ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் பரவலாக பார்க்க முடிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட், வெர்னா, கியா சொனெட் மற்றும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அதே முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றத்தையே புதிய க்ரெட்டாவும் பெற்றுள்ளது.

Image Source

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 12:15 [IST]
English summary
Hyundai creta facelift started arriving to dealerships check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X