இந்த ஒற்றை கார வச்சே ஹூண்டாய் பல ஆண்டுக்கு இந்தியால உயிர் வாழ்ந்திடும் போலையே! பரோட்டா கணக்கால விற்பனையாகுது!

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta Facelift) காருக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக 1 லட்சம் யூனிட்கள் வரை புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா நாட்டில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா எஸ்யூவி ரக காரை நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே விற்பனைக்குக் களமிறக்கியது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே சுமார் 1 லட்சம் யூனிட்டுகள் கிரெட்டா விற்பனையாகி விட்டதாக ஆச்சரியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் ஒட்டுமொத்த வாகன உலகையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. தற்போது விற்பனையாகி இருக்கும் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் நாள் ஒன்றிற்கு 550 யூனிட்டுகள் கிரெட்டா விற்பனையாகிக் கொண்டிருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. ஹூண்டாய் கிரெட்டாவை இந்தியர்களின் பிரியமான கார் மாடல் என கூறலாம்.

Hyundai creta hits 1 lakh sales

பெஸ்ட் செல்லிங் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் தவறாமல் இந்த கார் மாடலும் இடம் பிடித்து வருகின்றது. இந்த நிலையிலேயே கூடுதலாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கில் கடந்த ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

முற்றிலும் கவர்ச்சியான மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கிய காராகவே புதுப்பித்தலின் வாயிலாக கிரெட்டா மாற்றப்பட்டு இருக்கின்றது. கன்னெக்டட் வகை எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்பர் மற்றும் கிரில் ஆகியவை இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளன.

இதேபோல், பிரீமியம் அம்சங்களாக இரண்டு 10.25 அங்குல திரை (இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான திரை), காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், விரைந்து கேபினை குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி துளைகள், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவருக்கான பவர் இருக்கை மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய அம்சங்களும் இந்த கார்களில் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனம் புதிய கிரெட்டாவில் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 115 பிஎஸ் திறன் கொண்ட 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல், 160 பிஎஸ் திறனை உருவாக்கும் வசதிக் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய மோட்டார் மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் தொடங்கி ரூ. 20.15 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்கப்படுகின்றது. இந்த கார் மாடலில் அதிக ஆற்றலை வழங்கும் வெர்ஷனான என்-லைன்-ம் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இது ரூ. 16.82 லட்சம் தொடங்கி ரூ. 20.44 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் என இடத்தை கிரெட்டா எஸ்யூவி நீண்ட காலமாக அலங்கரித்து வருகின்றது. இந்த நிலையிலேயே ஒரு லட்சம் யூனிட் விற்பனையின் வாயிலாக, இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த காரே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 22:44 [IST]
English summary
Hyundai creta facelift surpasses 1 lakh units sales in india within six months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+