தேர்தல் ரிசல்டை விட இந்த காரை வாங்க தான் ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணுறாங்க! அப்படி இதுல என்ன இருக்குது தெரியுமா?
ஹுண்டாய் நிறுவனத்தின் காருக்கு தற்போது காத்திருப்பு காலம் 6 மாதம் வரை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை தற்போது புக் செய்தால் இன்னும் 6 மாதத்திற்கு பிறகு தான் வாங்க முடியும். இந்த காருக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்துள்ளதால், இந்த காத்திருப்பு காலம் இருப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் கிரெட்டா காரை பொருத்தவரை எஸ்யூவி கார்களின் ராஜா என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இந்த கார் புகழ்பெற்று விட்டது. இந்த காரை வாங்க ஏகப்பட்ட நபர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெக்டா காரை அறிமுகப்படுத்தியது.

இந்த கார் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட போது விற்பனையில் இருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்த கிரெக்டா காரின் வேரியன்ட்கள் அறிமுகமானது. இந்த என்-லைன் வேரியன்ட்கள் கரெக்டா காரின் ஸ்போர்டியர் வெர்ஷன் வேரியண்டுகளாக அறிமுகமாகி இந்த கார்களும் தற்போது விற்பனையில் இருந்து வருகின்றன. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி ஹுண்டாய் நிறுவனம் இந்த கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு 6 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் தெரிவித்துள்ளார். இதன்படி இந்த காரை வாங்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக ஆறு மாதம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை புக் செய்துள்ளதால் இந்த காத்திருப்பு காலம் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காத்திருப்பு காலம் என்பது வேரியன்ட்டை பொறுத்து மாறுபடுகிறது. சில வேரியன்ட்களுக்கு குறைவான காத்திருப்பு காலமும், சில வேரியன்ட்களுக்கு அதிகமான காத்திருப்பு காலமும் இருக்கிறது. வேரியன்ட், நீங்கள் கார் வாங்கும் ஊர், டீலர்ஷிப், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து தான் காத்திருப்பு காலம் என்பது முடிவு செய்யப்படுகிறது. அதன்படி 6 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.
அதாவது குறிப்பிட்ட சில வேரியன்ட்களை புக் செய்தால் 6 வாரங்களில் டெலிவரி செய்யப்படும் குறிப்பிட்ட சில வேரியன்ட்களை புக் செய்தால் 24 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது வாகனத்தின் தயாரிப்பை பொருத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் அதிகமாக தயாரிக்கப்படும் வாகனங்கள் குறைவான காத்திருப்பு காலங்களில் டெலிவரி செய்யப்படும். குறைவான விற்பனையில் இருக்கும் கார்களுக்கு அதிக காத்திருப்பு காலம் இருக்கும்.

தற்போது இந்த ஹுண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை பொருத்தவரை 95,000 பேர் புக் செய்துள்ளனர். இதில் 45ஆயிரம் பேருக்கு இன்னும் கார் டெலிவரி செய்யப்படாமல் அவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த காரை இன்னும் 5000 பேர் புக் செய்தால் சுமார் 1லட்சம் பேர் இந்த காரை புக் செய்துள்ளதாக நாம் கருதி விட முடியும்.
இந்த கார் டெலிவரி வரவர அந்த கார்களை ரோட்டில் பார்க்கும் மக்கள் உடனடியாக இந்த காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேரடியாக ஷோரூமுக்கு வந்து இந்த காரை புக் செய்து விடுகிறார்கள். இப்படிதான் இந்த காருக்கான புக்கிங் என்பது அதிகரித்துள்ளது. தற்போது 45 ஆயிரம் பேர் இந்த கார்களை புக் செய்து டெலிவரிக்காக காத்திருக்கும் நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் விரைவில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெக்டா காரின் காத்திருப்பு காலத்தை குறைத்து மிக விரைவாகவே இந்த டெலிவரி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இந்த கார் தான் வாங்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கவும் தயாராக இருப்பதால் தொடர்ந்து புக்கிங் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் அதை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதற்காக தான் காத்திருப்பு காலம் என்பது இருக்கிறது. காலத்தை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









