இந்த ஹூண்டாய் கார் 5 நிமிசத்துக்கு ஒன்னு சேல்ஸ் ஆகுது!! ஷோரூம்களில் கஸ்டமர்ஸ் ஈ மாதிரி மொய்கிறாங்க!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவி கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் 10 இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கிரெட்டா காரின் வரலாற்றையும், எத்தனை வருடங்களில் 10 இலட்சம் கிரெட்டா கார்கள் விற்பனையை ஹூண்டாய் நிறுவனம் கடந்துள்ளது என்பதை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகிக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் மார்க்கெட்டில் கிரெட்டா முதல்முறையாக 2015இல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே கிரெட்டா கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது.

10 lakh creta cars sold

2015 அறிமுகத்திற்கு பிறகு, 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிரெட்டா நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2020இன் துவக்கத்தில், சரியாக கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் புதிய கிரெட்டா அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு போதிய எண்ணிக்கையில் கிரெட்டா கார்கள் விற்பனையாகவில்லை. இன்னும் சொல்லப்போனால், 2020 ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட இந்தியாவில் விற்பனையாகவில்லை.

இருப்பினும், அந்த சூழலில் இருந்து கிரெட்டா மீண்டு வந்தது. ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட பின், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக கிரெட்டா முன்னிலை வகித்தது. இந்த நிலையில், கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கையில் 10 லட்சத்தை ஹூண்டாய் நிறுவனம் கடந்துள்ளது. அதாவது, வெறும் 8 வருடங்களில் 10 இலட்ச கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

10 lakh creta cars sold

இதன்படி பார்க்கும்போது, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கிரெட்டா கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. 2015இல் இருந்து 8 வருடங்களில் 10 இலட்ச கிரெட்டா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 2.80 லட்சம் ஆகும்.

2020இல் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டாவின் நியூ ஜென்ரேஷன் மாடல் கடந்த 4 வருடங்களில் சிலமுறை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்டது. கடைசியாக, கடந்த ஜனவரி மாதத்தில் கூட 2024 கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா உடன் ஒப்பிடுகையில், தற்சமயம் விற்பனையில் இருக்கும் கிரெட்டா போல்டான தோற்றத்தை கொண்டுள்ளது.

10 lakh creta cars sold

விற்பனையில் உள்ள கிரெட்டா காரின் உட்பக்க கேபின் பயணத்திற்கு சவுகரியத்தை வழங்குவது மட்டுமின்றி, ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, டேஸ்போர்டில் 26.03 செ.மீ-இல் இரு திரைகள் வழங்கப்படுகின்றன. இயக்க ஆற்றலை வழங்க ஹூண்டாய் கிரெட்டா காரில் 1.5 லிட்டர் எம்.பி.ஐ பெட்ரோல், 1.5 லிட்டர் யு2 டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ஐடியல் ஸ்டாப் & கோ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின்கள் செயல்படுதிறன் மற்றும் மைலேஜ் என இரண்டையும் ஒருசேர வழங்குகின்றன. 3 டிரைவிங் மோட்கள் மற்றும் 3 டிராக்‌ஷன் கண்ட்ரோல் மோட்கள் உள்ளிட்ட மோட்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஹூண்டாய் கிரெட்டா காரில் டிரைவிங் இன்னும் எளிமையானதாகவும், சவுகரியமானதாகவும் மாறியுள்ளது.

10 lakh creta cars sold

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த 8 வருடங்களாக ஹூண்டாய் நிறுவனத்தின் அடையாளமாக கிரெட்டா விளங்குகிறது என சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு நிறைய பேர் கிரெட்டா கார்களை வாங்கியுள்ளனர். குறிப்பாக, 2020ஆம் ஆண்டிற்கு பின் கிரெட்டாவை தேர்வு செய்யும் கஸ்டமர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி கார் பிராண்டாக ஹூண்டாய் உருவெடுத்து இருப்பதற்கு கிரெட்டாவின் பங்கு முக்கியமானது என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 22:25 [IST]
English summary
Hyundai creta has surpassed 10 lakh sales milestone in just 8 years in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X