மாருதியை தூங்க விடாமல் செய்யும் ஹூண்டாய் கார் இதுதான்! கஸ்டமர்ஸ் எதனால் குவியுறாங்க தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சமீப காலமாக பெரிதும் கைக் கொடுக்கும் எஸ்யூவி கார். 4 மீட்டர்களுக்கும் சற்று அதிகம் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹூண்டாய் கிரெட்டா விளங்குகிறது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக, உயரமான மற்றும் கம்பீரமான எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் கார்களுள் ஒன்றாக கிரெட்டாவை சொல்லலாம். குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய கிரெட்டா கார் இந்திய கஸ்டமர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்தியாவில் முதன்முதலாக 2016ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார் அதற்குபின் பலமுறை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. இந்த காரை மக்கள் பலரும் விரும்பி வாங்குவதற்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

hyundai creta indias no 1 suv

அசத்தலான வெளிப்புற தோற்றம் மற்றும் பிரீமியம் தரத்திலான உட்புற கேபின்: கிரெட்டாவின் அடையாளமே அதன் போல்ட்டான டிசைன் ஆகும். அதேநேரம், மாடர்ன் டச்களுக்கும் இந்த காரில் எந்தவொரு குறையும் கிடையாது. அதேபோல், காருக்கு உள்ளேயும், உயர் தரத்திலான மெட்டீரியல்களால் கேபின் வடிவமைக்கப்படுகிறது. இந்த காரின் விசாலமான கேபினில் போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இடவசதிகள் கொடுக்கப்படுகின்றன.

அதிகமான என்ஜின் ஆப்ஷன்கள்: கிரெட்டா காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்பன அவை ஆகும். அதேபோல், இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், சிவிடி, 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் என பல்வேறு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

hyundai creta indias no 1 suv

அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்கள்: கிரெட்டாவில் 360-டிகிரி கேமரா சிஸ்டம், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி என பிரீமியம் தரத்திலான வசதிகள் கொடுக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

மேலும், வாய்ஸ் மூலமாக செயல்படும் பனோராமிக் சன்ரூஃப், 8-வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை உள்ளிட்டவற்றையும் கிரெட்டாவில் பெறலாம். பயணிகள் மற்றும் காருக்கான பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் மொத்தம் 70 விதமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் 35க்கும் அதிகமான வசதிகள் கிரெட்டா காரின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் இருந்து கிடைக்கின்றன.

hyundai creta indias no 1 suv

ரைடு & ஹேண்ட்லிங்: கிரெட்டாவின் சஸ்பென்ஷன் செட்-அப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் டர்போ என்ஜினை கொண்ட கிரெட்டா காரிலும் சவுகரியமான பயணத்தை தரக்கூடியவைகளாக அதன் சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளது. அதேபோல், ஸ்டேரிங் சக்கரத்தின் ரெஸ்பான்ஸ் மற்றும் ஹேண்டிலிங் கிரெட்டாவை நெரிசல் மிகுந்த நகர்புறங்களிலும் மற்றும் விசாலமான நெடுஞ்சாலைகளிலும் சிறப்பாக இயக்குவதற்கு வழி வகுக்கிறது.

ஆஃப்டர்-சேல்ஸ் சப்போர்ட்: மாருதி சுஸுகியை போன்று ஹூண்டாயும் பெரிய நெட்வொர்க்கை இந்தியாவில் கொண்டுள்ளது. இதனால், ஒவ்வொரு கஸ்டமர்களையும் ஹூண்டாய் நிறுவனத்தால் பிரச்சனை இல்லாமல் கவனித்துக் கொள்ள முடிகிறது. இதுவும், கிரெட்டா கார்களை நிறைய பேர் வாங்குவதற்கு காரணம் ஆகும். காரை வாங்கிய பின்பு அதற்கான சர்வீஸ்களையும், பார்ட்ஸையும் பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படுவதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 8 வருடங்களுக்கு பின் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் கிரெட்டா கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லாக 10 இலட்சத்தை ஹூண்டாய் கடந்தது. அதாவது ஒவ்வொரு வருடத்திலும் சராசரியாக சுமார் 82 ஆயிரம் கிரெட்டா கார்கள் விற்பனையாகுகின்றன. இதில் இருந்து கிரெட்டா காருக்கு இந்தியாவில் இருக்கும் மவுசை அறியலாம். புக் செய்தால் உடனடியான கிடைக்கும் டெலிவிரியும் ஹூண்டாய் கிரெட்டா கார் கஸ்டமர்களை தொடர்ந்து அதிகரிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 3, 2024, 10:30 [IST]
English summary
Hyundai creta how indias no 1 compact suv car top 5 reasons check all details here
மேலும்... #hyundai #hyundai creta #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X