இந்த பண்டிகைக்கு வித்தியாசமான காரை வாங்கலாம்னு இருக்கீங்களா.. இதோ ஹூண்டாயோட ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வரும் பண்டிகைக் காலத்தை தன்னுடைய வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்துடன் சிறப்பிக்கும் விதமாக ஓர் சிறப்பு பதிப்பை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான கிரெட்டா (Creta)-விலேயே அது சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கிரெட்டா நைட் எடிசன் (Hyundai Creta Knight Edition)யே அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 14.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இரண்டு விதமான வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும். கிரெட்டா நைட் எஸ் (ஓ) (CRETA Knight S (O)) மற்றும் கிரெட்டா நைட் எக்ஸ்எக்ஸ் (ஓ) (CRETA Knight SX (O)) ஆகியவையே அவை ஆகும். இதேபோல், இதில் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன. இதுதவிர, பன்முக கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இவற்றில் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், பெட்ரோல் மோட்டார் உடன் மேனுவல், ஐவிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசல் மோட்டாருடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிசன் வழக்கமான கிரெட்டாவைக் காட்டிலும் அதிக கவர்ச்சியானதாகவும், அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக 21 மாற்றங்களை வழக்கமான கிரெட்டாவிடம் இருந்து இந்த சிறப்பு பதிப்பு கிரெட்டா பெற்றிருக்கின்றது. அந்தவகையில், காரின் பெரும்பாலான பாகங்களுக்கு கருப்பு நிற பெயிண்ட் பூச்சு செய்யப்பட்டு இருக்கின்றது.

இது நைட் எடிசன் அந்த காரின் பெயருக்கு ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது. கிரில்-லிற்கு கருப்பு நிறமும், இதன் லோகோவிற்கு மேட் பிளாக் நிறமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, காரின் அலாய் வீல்களுக்கும் கருப்பு நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதன் பிரேக் காலிபர்களுக்கு சிவப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, முன் மற்றும் பின்னால் உள்ள ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள், சி-பில்லர் கார்னிஷ், ஓஆர்விஎம்-கள் மற்றும் ஸ்பாய்ளர்கள் உள்ளிட்டவற்றிற்கும் கருப்பு நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் வெளிப்புறத்தில் மட்டுமில்லைங்க உட்பக்கத்திலும் அதிக அளவில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஸ்போர்ட்டி மெட்டல் பெடல்களும் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் டூயல் டோன்-னிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. கூடுதல் ரூ. 5 ஆயிரம் கட்டணத்திலேயே இது வழங்க இருக்கின்றது ஹூண்டாய்.
இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் ஹூண்டாய் இந்த சிறப்பு பதிப்பில் செய்யவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கின்றது. இதில் சிறப்பு பதிப்பை ஹூண்டாய் இணைத்திருப்பது அதன் விற்பனையை வரும் நாட்களில் பூஸ்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, விரைவில் விஜயதசமி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வரவிருக்கின்றது. இந்த நாட்களில் மக்களின் மனம் கவர்ந்த வாகனமாக அது மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பு பதிப்பு அல்லாத வழக்கமான கிரெட்டா இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் அதிகபட்ச விலையே ரூ. 20.15 லட்சம் ஆகும். மேலும், ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா கார் மாடலில் என்-லைன் எனும் ஆப்ஷனையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அது ரூ. 16.82 லட்சம் தொடங்கி ரூ. 20.44 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டா கார் மாடலுக்கு என தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும் ஹூண்டாய் நிறுவனம் சிறப்பு பதிப்பை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இது சிறப்பு பதிப்பு என்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ விபரம் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications









